பஹாமஸ் தீவுகளை சூறையாடிய டோரியன் புயல் அமெரிக்காவை தாக்கத் தொடங்கியது...!

news18
Updated: September 6, 2019, 10:09 AM IST
பஹாமஸ் தீவுகளை சூறையாடிய டோரியன் புயல் அமெரிக்காவை தாக்கத் தொடங்கியது...!
பஹாமாஸ் தீவு
news18
Updated: September 6, 2019, 10:09 AM IST
பஹாமஸ் தீவுகளை சூறையாடிய டோரியன் புயல் அமெரிக்காவை தாக்கத் தொடங்கியுள்ளது. பாதுகாப்பான இடங்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கரீபியன் தீவுக்கு அருகே சமீபத்தில் சக்தி வாய்ந்த புயல் உருவானது. இந்த புயலுக்கு ‘டோரியன்’ என பெயரிடப்பட்டது.

‘டோரியன்’ புயலானது அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பஹாமாஸ் தீவுகளை இரு தினங்களுக்கு முன்னர் கடுமையாக தாக்கியது.


எல்போகே என்ற பகுதியில் புயல் கரையைக் கடந்த போது,
மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. புயலின் வேகம் காரணமாக சாலைகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. வீடுகளில் இருந்த மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன.

இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பஹாமசில் பல்வேறு பகுதிகளில் மின்இணைப்பு மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading...

‘டோரியன்’ புயல் காரணமாக பஹாமசில் பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்பட்டிருக்கும் என நம்பப்படுகிறது. இந்த புயலுக்கு 5 பேர் பலியாகி உள்ளனர்.

டோரியன் புயலானது அடுத்ததாக அமெரிக்காவை நோக்கி செல்லும் நிலையில், அங்குள்ள கிழக்கு கடலோர பகுதிவாழ் மக்கள் லட்சக்கணக்கானோர் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான  இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

வடக்கு கரோலினா பகுதியை புயல் தற்போது தாக்கத்தொடங்கியுள்ளது. கட்டிடங்களின் கூறைகள் காற்றில் வேகத்தில் பறந்தன. புயலைத்தொடர்ந்து கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

First published: September 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...