அமலுக்கு வந்த கருக்கலைப்பு தடைச் சட்டம்- அமெரிக்காவில் மக்கள் போராட்டம்

கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 16 அமெரிக்க மாகாணங்களில் கருக்கலைப்பு தடை தொடர்பான தீர்மானங்கள் மெல்ல மெல்ல நிறைவேற்றப்பட்டு வந்தன.

Web Desk | news18
Updated: May 20, 2019, 3:11 PM IST
அமலுக்கு வந்த கருக்கலைப்பு தடைச் சட்டம்- அமெரிக்காவில் மக்கள் போராட்டம்
கருக்கலைப்பு தடைச்சட்டம் (Image: Reuters)
Web Desk | news18
Updated: May 20, 2019, 3:11 PM IST
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கருக்கலைப்பு தடைச் சட்டத்துக்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் மாகாண தலைநகரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு தடை கொண்டு வரப்படும் என கடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது ட்ரம்ப் பரப்புரை செய்தார். இதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்-ன் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆளும் மாகாணங்களில் எல்லாம் கருக்கலைப்பு தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 16 அமெரிக்க மாகாணங்களில் கருக்கலைப்பு தடை தொடர்பான தீர்மானங்கள் மெல்ல மெல்ல நிறைவேற்றப்பட்டு வந்தன. தற்போது அலபாமா மாகாணத்தில் கருக்கலைப்பு தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அலபாமா தலைநகர் மாண்ட்கோமெரியில் மட்டும் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் தெருக்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


இச்சட்டம் அமலானதால் கருக்கலைப்பு செய்வோருக்கும் உதவும் மருத்துவர்களுக்கும் சுமார் 10 முதல் 99 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: 2.5 லட்சம் ரோஹிங்யா அகதிகளுக்கு முதல் அடையாள அட்டை- ஐநா
First published: May 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...