வங்கதேசத்தில் போலீஸ் காவலில் எழுத்தாளர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக, உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி தலைநகர் டாக்காவில் மாணவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என எழுத்தாளர் முஷ்டாக் அகமது விமர்சனம் செய்து, இணையத்தில் கருத்து பதிவிட்டார். இதையடுத்து, அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாகக் கூறி, கைது செய்யப்பட்ட அவர், போலீஸ் காவலில் இருந்தபோது கடந்த வாரம் உயிரிழந்தார்.
எழுத்தாளர் முஷ்டாக் அகமது
இதனைக் கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், முஷ்டாக் அகமது இறப்பு குறித்து உரிய நீதி விசாரணை நடத்தவும், கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கக் கோரியும் டாக்காவில் மாபெரும் பேரணி நடைபெற்றது.