Home /News /international /

டிக்டாக் நிறுவனத்திற்கு பணியாற்றும் சீன அரசு செய்தியாளர்கள் - ஃபோர்ப்ஸ் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

டிக்டாக் நிறுவனத்திற்கு பணியாற்றும் சீன அரசு செய்தியாளர்கள் - ஃபோர்ப்ஸ் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

டிக் டாக்

டிக் டாக்

பைட் டான்ஸ்  உறுப்பான டிக்டோக்கில் பணிபுரியும் ஊழியர்களில் 50 பேர் சீன ஊடகத்தில் பணியாற்றியவர்கள். இதில் உள்ளடக்க உத்தி மேலாளர் ஒருவர் முன்பு சின்ஹுவா நியூஸின் தலைமை நிருபராக இருந்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
பொது ஊழியர்களின் லிங்குடு-இன் (LinkedIn) சுயவிவரங்களை மதிப்பாய்வு செய்த ஃபோர்ப்ஸ் ஆய்வின் முடிவில் , டிக்டாக் மற்றும் அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ்(ByteDance) நிறுவனத்தில் தற்போது பணியில் உள்ள 300 ஊழியர்கள் இதற்கு முன்பு சீன அரசு ஊடக நிறுவனங்களில் பணியாற்றினர் என்று தெரியவந்துள்ளது.

லிங்குடு-இன் என்பது ஒரு நபர் அவரது படிப்பு அல்லது வேலை சார்ந்த நபர்களை சந்திக்கவும், தனக்குத் தேவையான வேலை வாய்ப்புகளைத் தேடவும் உதவும் தளமாகும். ஒருவரின் படிப்பு, வேலை முதலிய விவரங்கள் லிங்குடு-இன் கணக்குகளில் உள்ளிட்டு அதை வைத்து வேலை வாய்ப்புகளை பெறுவர்.

அப்படி  பைட் டான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலார்களின் கணக்கை பார்க்கும்போது அதில் பலர் சீன அரசுக்கு பணியாற்றியவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

ரஷிய மூலத்தை மறைக்க நடுக்கடல் வர்த்தகம் செய்த இந்தியா.. கவலை தெரிவித்த அமெரிக்கா

பைட் டான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் 300 பேரில், 23 லிங்குடு இன் சுயவிவரங்கள் தற்போதைய பைட் டான்ஸ் இயக்குநர்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் பைட் டான்ஸ் நிறுவனத்தில் உள்ளடக்க கூட்டாண்மைகள், பொது விவகாரங்கள், பெருநிறுவன சமூகப் பொறுப்பு மற்றும் "ஊடக ஒத்துழைப்பு" ஆகியவற்றை மேற்பார்வையிடும் துறைகளை நிர்வகிக்கின்ற பணி செய்து வருகின்றனர். இவர்கள் எல்லாம் சீன அரசின் ஊழியர்கள் ஆவர்.

சீன அரசு சீன கம்யூனிஸ்ட் கட்சிக்காக தவறான தகவல்களைப் பரப்புவதற்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் அதிக முதலீடு செய்து வருவதாக ஃபோர்ப்ஸ் தெரிவிக்கிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற தளங்களில் சீன அரசு அமைப்புகள் அதிக அளவில் உள்ளன. அதேபோல் தற்போது டிக் டாக் நிறுவனத்துள்ளும் சீன அரசு நுழைந்துள்ளது.

அதேபோல்,  சின்ஹுவா நியூஸ் ஏஜென்சி, சைனா ரேடியோ இன்டர்நேஷனல் மற்றும் சைனா சென்ட்ரல் / சைனா குளோபல் டெலிவிஷன் உள்ளிட்ட சீன அரசு ஊடக நிறுவன 15 ஊழியர்கள் தற்போது பைட் டான்ஸ் நிறுவனத்திலும் பணியாற்றுகின்றனர். இந்த அமைப்புகளும் 2020 இல் வெளியுறவுத் துறையால் உருவாக்கப்பட்டதாகும்.

பைட் டான்ஸ்  உறுப்பான டிக்டோக்கில் பணிபுரியும் ஊழியர்களில் 50 பேர் சீன ஊடகத்தில் பணியாற்றியவர்கள். இதில் உள்ளடக்க உத்தி மேலாளர் ஒருவர் முன்பு சின்ஹுவா நியூஸின் தலைமை நிருபராக இருந்தார்.

ஃபோர்ப்ஸ் படி, இந்த அறிக்கையில் பெயரிடப்பட்ட எந்த  ஊடகங்களும் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. பைட் டான்ஸ், டிக் டாக் நிறுவனம் தனது சீன அரசு ஊடகத்துடனான தொடர்புகளை மறுக்கவில்லை.

பைட் டான்ஸ் செய்தி தொடர்பாளர் ஜெனிபர் பேங்க்ஸ், "பைட் டான்ஸ்,ஒரு தனிநபரின் தொழில்முறை திறனை அடிப்படையாகக் கொண்டு பணியமர்த்தல் முடிவுகளை மேற்கொள்கிறது. எங்கள் சீன-மார்க்கெட் வணிகங்களுக்கு, சீனாவில் அரசு அல்லது அரசு ஊடகப் பதவிகளில் முன்பு பணியாற்றியவர்களும் அடங்குவர். சீனாவிற்கு வெளியே, பல்வேறு அரசாங்கம், பொதுக் கொள்கை மற்றும் ஊடக நிறுவனங்களில் அனுபவத்தைக் கொண்டவர்கள் எங்களுக்காக பணியாற்றுகிறார்கள், என்றார்.

75ஆவது இந்திய சுதந்திர தினம்: சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்

அமெரிக்காவில் டிக்டோக்கின் பரந்த கலாச்சார செல்வாக்கை சீனா தனது சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக்கூடும் என்று அமெரிக்கா அஞ்சியது. இதனால் 2019 இல் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் , அமெரிக்க அரசியல்வாதிகளின் கூட்டத்தில் இந்தச் செயலியைத் தடை செய்தார்.

இதற்கிடையில், டிக்டோக் சீன அரசாங்கத்திற்கு பயனர் தரவை வழங்குவதாக மேற்கோள் காட்டி, பிரிட்டிஷ் பாராளுமன்றம் அதன் டிக்டோக் கணக்கை மூடியுள்ளது என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதற்காக கணக்கைத் தொடங்கிய ஆறு நாட்களுக்குப் பிறகு, சமூக ஊடக சுயவிவரத்தை செயலிழக்கச் செய்ததை சீன நாடாளுமன்ற அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: China, China Apps, Tik Tok

அடுத்த செய்தி