• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • Microplastic: தங்களுக்கு தெரியாமலேயே நாள்தோறும் 7000 பிளாஸ்டிக் துகள்களை சுவாசிக்கும் மனிதர்கள்!

Microplastic: தங்களுக்கு தெரியாமலேயே நாள்தோறும் 7000 பிளாஸ்டிக் துகள்களை சுவாசிக்கும் மனிதர்கள்!

நுண் நெகிழி

நுண் நெகிழி

உங்கள் உடலில் நுண் நெகிழி துகள்கள் இருப்பதால் மன அழுத்தம் மற்றும் வளர்சிதை மாற்றத்தில் மாற்றங்கள் ஏற்படலாம், இது நோய் எதிர்ப்பு சக்தி, தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடும் திறன், உங்கள் இனப்பெருக்க திறனை பாதிக்கலாம் என்று புரொபசர்  அனூப் சவுஹான் கூறுகிறார்.

  • Share this:
    மனிதர்கள் தங்களின் உடை,  பொம்மைகள், பொருட்கள் ஆகியவற்றின் வழியாக நாள் ஒன்றுக்கு சுமார் 7000 நுண்நெகிழி (Microplastic) துகள்களை சுவாசிப்பது ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

    இங்கிலாந்தில் உள்ள போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தில் ( university of portsmouth) ஆராய்ச்சியாளராக உள்ள சுற்றுச்சூழல் மாசு நிபுணரான ஃபே கூசிரோ(Fay Couceiro) நுண் நெகிழி குறித்த ஆராய்ச்சி ஒன்றை தலைமை தாங்கி நடத்தியுள்ளார். நுண் நெகிழி துகள் குறித்த இந்த ஆராய்ச்சியில், மனிதர்கள் நாளொன்றுக்கு 7000 நுண் நெகிழிகளை சுவாசிப்பது தெரியவந்துள்ளது.

    இந்த ஆராய்ச்சியில் எட்டு வயது சிறுமி ஒருவரின் அறையில் அதிக பிளாஸ்டிக் செறிவு இருந்தது. அவளது படுக்கை, தரைவிரிப்பு மற்றும் பொம்மைகள் அனைத்தும் செயற்கை பொருட்களால் செய்யப்பட்டிருந்ததே இதற்கு காரணம்.

    மேலும், 'நமது ஒவ்வொரு வீட்டிலும் சுவாசிக்கக்கூடிய நுண் நெகிழிகளின் அளவைக் கண்டு நான் வியப்படைகிறேன், மேலும் இதைப் பற்றிய கூடுதல் வேலைகள் கண்டிப்பாக செய்யப்பட வேண்டும். இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அளவு குறைவாக இருக்கலாம். ஏனினெல், இந்த அளவு 14 மணி நேரத்தில் சேகரிக்கப்பட்டவை, 24 மணி நேரத்தில் சேகரிக்கப்பட்டவை அல்ல ‘ என்றும் அவர் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: உலகம் உருவான ரகசியத்தை கண்டறியும் ஆய்வில் புதிய தகவல்கள்


    இது தொடர்பாக புரொபசர்  அனூப் சவுஹான் கூறுகையில், உங்கள் உடலில் இந்த (நுண் நெகிழி) துகள்கள் இருப்பதால் மன அழுத்தம் மற்றும் வளர்சிதை மாற்றத்தில் மாற்றங்கள் ஏற்படலாம், இது நோய் எதிர்ப்பு சக்தி, தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடும் திறன், உங்கள் இனப்பெருக்க திறனை பாதிக்கலாம் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும்’ என குறிப்பிடுகிறார். மனிதர்களின் வீடுகளில் மறைந்துள்ள ஆபத்து நுண் நெகிழிகள் என்றும் அவர் கூறுகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: