துபாயில் உள்ள மியூசியம் ஒஃப் ஃபியூசர்( Museum Of Future)என்ற அருங்காட்சியகத்தில் நவீன முறையில் ரோபோவை ஊழியராக அறிமுகம் செய்துள்ளனர்.
அமேகா என்ற பெயரிடப்பட்ட அந்த ரோபோ மிகவும் அதிநவீனமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவை அருங்காட்சியகத்தில் ஊழியர்களின் ஒருவராக நிர்வாகம் அறிவித்துள்ளது. அமேகா ரோபோவின் வீடியோ அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அமேகா, அருங்காட்சியகத்திற்கு வருபவர்களை வரவேற்கும், மேலும் வருபவருக்கு அருங்காட்சியகத்தின் திசைக்காட்டியாகவும் செயல் படுகிறது. அமேகா பல மொழிகளில் பேசும் தன்மையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூரிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
மியூசியம் ஒஃப் ஃபியூசர், வெளியிட்டுள்ள வீடியோவில், அமேகா அருங்காட்சியக ஊழியருடன் எமிராட்டி மொழியில் உரையாடுகிறது. உலகின் மிகவும் அதிநவீனமாக மனித உருவ ரோபோ மியூசியம் ஒஃப் ஃபியூசருடன் இணைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read : சுரங்கத்தில் கிடைத்த 140 ஆண்டுகள் பழமையான ஜீன்ஸ் பேன்ட்.. ரூ.72 லட்சத்திற்கு ஏலம் போனது!
அமேகா ரோபோவின் வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பல ஆயிரம் ஷேர்களை கடந்து வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அமேகாவைப் பார்த்து நெட்டிசன்கள் பலரும் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பற்றி கருத்துகள் பதிவிட்டு நெகிழ்ந்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dubai, Robo, Trending Video, Viral Video