குழந்தைகளைக் கொடுமை செய்யாதீர்கள்- நைஜீரிய ராணுவத்துக்கு மனித உரிமை ஆணையம் வேண்டுகோள்

ஐநா அறிக்கையின் அடிப்படையில் கடந்த 2013 முதல் 2019 ஜனவரி வரையில் சுமார் 3,600 குழந்தைகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

Web Desk | news18
Updated: September 10, 2019, 7:35 PM IST
குழந்தைகளைக் கொடுமை செய்யாதீர்கள்- நைஜீரிய ராணுவத்துக்கு மனித உரிமை ஆணையம் வேண்டுகோள்
போகோ ஹராம்
Web Desk | news18
Updated: September 10, 2019, 7:35 PM IST
நைஜீரியாவில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தால் கைது செய்யப்பட்டுள்ள குழந்தைகளை ராணுவம் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக குழந்தைகள் பலரையும் ராணுவத்தார் கைது செய்துள்ளனர். இந்தக் குழந்தைகளை மனிதத்தன்மையே இல்லாமல் நைஜீரிய ராணுவத்தார் கொடுமை செய்வதாகவும் அவர்களைத் தேவையற்ற துன்பங்களைச் சந்தித்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதை எதிர்த்த அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை பார்வை என்னும் மையம் நைஜீரிய ராணுவத்துக்கு வேண்டுகோளும் வைத்துள்ளது. ”வெளிஉலகின் சுவடு கூட அறியாமல் பல ஆயிரம் குழந்தைகள் மாதக்கணக்கில் ஆண்டுக்கணக்கில் எந்தவொரு குற்றமும் சுமத்தப்படாமல் சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார்கள்.


குழந்தைகள் சிறையில் இருப்பதற்கான எந்தவொரு காரணமும் சொல்லப்படவில்லை. போகோ ஹராம் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதற்கான ஆதாரமும் இல்லை” என்கிறது மனித உரிமை மையம். ஐநா அறிக்கையின் அடிப்படையில் கடந்த 2013 முதல் 2019 ஜனவரி வரையில் சுமார் 3,600 குழந்தைகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பாதி பேர் பெண் குழந்தைகள் என்றும் ஐநா குறிப்பிடுகிறது.

உள்ளூர் முதல் சர்வதேச மனித உரிமை இயக்கங்கள் வரையில் பல தரப்பிலிருந்தும் சிறையில் உள்ள குழந்தைகளுக்கு ஆதரவாக பலரும் முன்வருகின்றனர். ஆனால், இதுவரையில் நைஜீரியா ராணுவம் இதுதொடர்பாக எவ்வித பதிலும் அளிக்கவில்லை.

மேலும் பார்க்க: மசூத் அசாரை பாக். ரகசியமாய் விடுவித்ததாக உளவுத்துறை எச்சரிக்கை!

Loading...

First published: September 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...