தெற்கு அட்லாண்டிக்கில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயரும் அபாயம்...

தெற்கு அட்லாண்டிக்கில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயரும் அபாயம்...

கோப்புப்படம் (படம்: ராய்ட்டர்ஸ்)

தெற்கு அட்லாண்டிக்கில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 • Share this:
  உலகின் மிகப்பெரிய பனிப்பாறைகளில் ஒன்றாக கருதப்படும் தெற்கு அட்லாண்டிக் பகுதியில் உள்ள A-68a என்ற பனிப்பாறை எதிர்பார்த்தபடி வேகமாக உருகிவருவதாக பிரிட்டிஷ் ராயல் விமானப்படை தெரிவித்துள்ளது. உலக வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வந்தனர். இந்நிலையில், தெற்கு ஜார்ஜியாவின் A-68a என்ற பனிப்பாறை விரைவில் உடைந்து சிறுசிறு பாகங்களாக கடலில் சிதறும் என விஞ்ஞானிகள் கணித்திருந்தனர்.

  அதன்படி ஒரு தீவு போன்று காணப்பட்ட பனிப்பாறை உடைந்து தெற்கு அட்லாண்டிக் கடலில் சிறுசிறு பாகங்களாக சிதற ஆரம்பித்துள்ளது. இதனை பிரிட்டிஷ் ராயல் விமானப்படையினர் வானிலிருந்து படம் பிடித்துள்ளனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: