Home /News /international /

வானுயர்ந்த 42 மாடி கட்டடம் தீக்கு இரையானது.. பதறவைக்கும் வீடியோ

வானுயர்ந்த 42 மாடி கட்டடம் தீக்கு இரையானது.. பதறவைக்கும் வீடியோ

வானுயர்ந்த 42 மாடி கட்டடம் தீக்கு இரையானது

வானுயர்ந்த 42 மாடி கட்டடம் தீக்கு இரையானது

சீனாவின் தெற்கு மாகாணமான ஹுனானின் தலைநகரான சாங்ஷா நகரத்தில் உள்ள மிக உயரமான அலுவலகக் கட்டடத்தில் இன்று பிற்பகல் தீவிபத்து ஏற்பட்டது. .

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • international | chinachinachinachinachina
    சீனாவின் தெற்கு மாகாணமான ஹுனானின் தலைநகரான சாங்ஷா நகரத்தில் உள்ள மிக உயரமான அலுவலகக் கட்டடத்தில் இன்று பிற்பகல் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அந்த கட்டடத்தில் இருந்த அனைத்து மாடிகளிலும் பயங்கரமாக பற்றி எரிந்தது.

     







    தீயை அணைக்கும் பணியில் மீட்பு வீரார்கள் உடனடியாக ஈடுபடுத்தப்பட்டதால், பெரும்பாலான அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. 42 அடுக்குமாடிகள் கொண்ட இந்த வானளாவிய கட்டிடத்தில், சீன அரசின் தொலைதொடர்பு நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், " தீ விபத்து காரணமாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. தொலைதொடர்பு சேவை  துண்டிக்கப்படவில்லை. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன " என்று தெரிவித்தார். இருப்பினும், தீ விபத்துக்கான காரணங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
    Published by:Salanraj R
    First published:

    Tags: China, Viral

    அடுத்த செய்தி