முகப்பு /செய்தி /உலகம் / கிரிக்கெட் மைதானம் அருகே சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு.. பாதுகாப்பு வளையத்திற்குள் பாபர் அசாம், அஃப்ரிடி!

கிரிக்கெட் மைதானம் அருகே சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு.. பாதுகாப்பு வளையத்திற்குள் பாபர் அசாம், அஃப்ரிடி!

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்ற மைதானம் அருகே சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • intern, IndiaIslamabadIslamabad

பாகிஸ்தானில் பயங்கரவாத வெடிகுண்டு தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளன. அந்நாட்டில் தற்போது தெரிக்-இ-தாலிபான் என்ற பயங்கரவாத குழுவின் செயல்பாடுகள் தலைதூக்கியுள்ளன. இந்த அமைப்பு தொடர் பயங்கரவாத தாக்குதலை முன்னெடுத்து வருகின்றது. கடந்த வாரம் பெஷாவரில் உள்ள மசூதியில் தெரிக் -இ-தாலிபான் நடத்திய வெடிகுண்டு பயங்கரவாத தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

இதன் காரணமாக பாகிஸ்தான் மக்கள் பீதியான சூழலில் உள்ளனர். இந்நிலையில் அந்நாட்டின் பலுசிஸ்தான் பகுதி அருகே உள்ள குவெட்டா என்ற பகுதியில் மீண்டும் தெரிக் இ தாலிபான் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. அங்கு போலீசார் முகாமிட்டு ரோந்து செய்யும் பகுதியில் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த கோர தாக்குதலில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் நடத்த சில மைல் தூரத்தில் தான் அந்நாட்டின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கண்காட்சி போட்டியில் விளையாடினர். பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடருக்கான ப்ரோமோ போட்டியானது சம்பவ இடத்திற்கு அருகே உள்ள நவாப் அக்பர் புக்டி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்க பாபர் அசாம், சாஹித் அஃப்ரிடி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் வருகை தந்தனர்.

குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்ற சில நிமிடங்களில் மைதானத்திற்கு தகவல் வழங்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போட்டி நிறுத்தப்பட்டது. வீரர்களை பாதுகாப்பாக டிரெஸ்சிங் ரூமுக்கு அனுப்பி வைத்த பாதுகாப்பு படையினர், மைதானத்தை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

First published:

Tags: Babar Azam, Bomb blast, Pakistan cricket, Shahid Afridi