ஹோம் /நியூஸ் /உலகம் /

நேபாள மலைப்பகுதியில் மிகப்பெரிய பனிச்சரிவு - திக் திக் நிமிடங்களின் நேரடி காட்சி

நேபாள மலைப்பகுதியில் மிகப்பெரிய பனிச்சரிவு - திக் திக் நிமிடங்களின் நேரடி காட்சி

பனிச்சரிவு காட்சிகள்

பனிச்சரிவு காட்சிகள்

இந்த நிகழ்விற்கு இரண்டு நாட்கள் முன்பு அந்த பகுதியில் பணியில் சிக்கி மலையேறச் சென்ற இரண்டு பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • international, IndiaNepalNepal

  நேபாள நாட்டு மனஸ்லு மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை பெரிய அளவிலான பனிச்சரிவு  ஏற்பட்டுள்ளது. அந்த திக் திக் நொடிகளை அந்த பகுதியில் மலையேற சென்ற ஒருவரால் துல்லியமாய் காணொளியாகப் பதிவிடப்பட்டுள்ளது.

  8,163 மீட்டர் அடி உயரம் உள்ள உலகின் எட்டாவது பெரிய மலையான மனஸ்லு மலையை தாஷி ஷெர்பா என்ற நபர் ஏறுவதற்காகச் சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் பெரிய அளவிலான பனிச்சரிவு  ஏற்பட்டுள்ளது. அதனை அவர் காணொளியாகப் பதிவிட்டு இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

  பனிச்சரிவு  அந்த பகுதியில் உள்ள பல முகாம்களைச் சேதமாக்கியுள்ளது. மேலும் இதனால் அங்கு எந்த உயிர்ச் சேதமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிச்சரிவு  அந்த பகுதியை நோக்கி வேகமாக வருவது அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
   
  View this post on Instagram

   

  A post shared by TASHI-LAKPA-SHERPA (@tashi8848.86)  இந்த நிகழ்விற்கு இரண்டு நாட்கள் முன்பு அந்த பகுதியில் பணியில் சிக்கி மலையேறச் சென்ற இரண்டு பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேபாள சுற்றுலாத் துறை தகவலின் படி கடந்த செப்டம்பர் 26ம் தேதி ஏற்பட்ட பனிச்சரிவு=வில் பல பேர் காயமயடந்தாக தெரிவித்துள்ளனர்.

  Also Read : இங்கிலாந்தின் மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறித்த நாணயம் வெளியீடு!

  சுற்றுலாத் துறையால் இந்த ஆண்டு 400க்கும் மேற்பட்டவர்களுக்கு மலையேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் வானிலை காரணமாகப் பலரும் அந்த பகுதியில் மலையேறுவதைக் கைவிட்டுத் திரும்பி வருகின்றனர்.

  Published by:Janvi
  First published:

  Tags: Nepal