• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • 3 கேலக்ஸிகளுக்கு இடையே அழகிய சண்டை… புகைப்படம் எடுத்த ’ஹப்பிள்’!

3 கேலக்ஸிகளுக்கு இடையே அழகிய சண்டை… புகைப்படம் எடுத்த ’ஹப்பிள்’!

விண்வெளியில் அண்மையில் 3 கேலக்ஸிகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொண்டதை நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி அழகாக புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.

  • Share this:
3 கேலக்ஸிகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதை ஹப்பிள் தொலைநோக்கி அழகாக படம்பிடித்து அனுப்பியுள்ளது.

சகோதரர்கள், நண்பர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதை பார்த்திருக்கிறோம். ஆனால், பால்வெளி அண்டத்தில் உள்ள விண்வெளியில் கேலக்ஸிகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொள்வதை எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறோமா? உண்மையில் இதனை கூறினால் நம்பக்கூட மாட்டார்கள். என்ன கேலக்ஸிகள் சண்டையிட்டுக்கொள்கிறதா? என நம்மை நோக்கி கேள்வியை எழுப்புவார்கள்.

அதிசயம் என்னவென்றால், விண்வெளியில் அண்மையில் 3 கேலக்ஸிகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொண்டதை நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி அழகாக புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. தற்போது நாசா அதனை வெளியிட்டுள்ளது. பெரிய விண்மீன் கூட்டங்களை அடங்கிய ஒரு குழுவை கேலக்ஸி எனக் கூறுகிறோம். விண்வெளியில் இதுபோன்று ஆயிரக்கணக்கான கேலக்ஸி கூட்டங்கள் இருக்கின்றன.

Must Read | வொர்க் ஃப்ரம் ஹோமிற்கு விரைவில் ‘குட்பை’… கூகுள் ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை அனுப்பிய இ-மெயில்

அவற்றுக்கு இடையே சண்டை எழுவதற்கு பொதுவான ஒரே காரணம் ஈர்ப்பு விசை மட்டுமே. நாம் எப்படி பிஸ்கட் மற்றும் பொம்மைகளுக்கு சண்டைபோட்டுக் கொள்கிறோமோ, அதனைப்போல் கேலக்ஸிகள் ஈர்ப்பு விசைகளுக்காக சண்டையிட்டுக்கொள்ளும். அப்போது, நட்சத்திரங்கள், கோள்கள், சிறுகோள்கள் உள்ளிட்டவைகளை, சகோதர கேலக்ஸி மீது ஆதிக்கம் செலுத்தி இழுத்துக்கொள்ளும். இரண்டு கேலக்ஸிகளும் ஒரே அளவிலான ஈர்ப்பு விசையைக் கொண்டிருந்தால், ஒன்றோடொன்று மோதிக்கொள்ளவும் செய்யும்.

அப்படியான அரிய நிகழ்வை அண்மையில் நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி அழகாக படம்பிடித்து அனுப்பியுள்ளது. ஜூலை 30 ஆம் தேதி அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அந்தப் புகைப்படத்தில் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் 3 கேலக்ஸிகளும் Arp 195 எனப்படும் சகோதர கேலக்ஸிகள் ஆகும்.

விசித்திரமான விண்மீன் திரள்களைக் கொண்டிருக்கும் கேலக்ஸி கூட்டத்துக்கு ஏற்ப பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்த கேலக்ஸி கூட்டங்கள் அட்லஸ் ஆஃப் பெக்யூளியர் கேலக்ஸிகள் என அழைக்கப்படுகின்றன. கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பணியாற்றிய வானியலாளர் ஹால்டன் ஆர்பால் 1966ஆம் ஆண்டில் இந்த கேலக்ஸி பட்டியலை தயாரித்தார். விசித்திரமான விண்மீன் திரள்களைக் கொண்டிருக்கும் கேலக்ஸிகள், தன்னுடைய ஈர்ப்பு விசையால் மற்றொரு கேலக்ஸி தொடர்பு கொள்பவையாக இருக்கின்றன.

மோதிக்கொள்ளக்கூடிய கேலக்ஸிகள் எனவும் அடையாளப்படுத்தப்படுகின்றன. டிவார்ப் (dwarf) வகை கேலக்ஸிகளும் உள்ளன. அந்த விண்மீன் கூட்டத்தில் போதுமான ஈர்ப்பு மற்றும் நிறை இருக்காது என்பதால், ஈர்ப்பு விசை அதிகம் உள்ள கேலக்ஸிகளுடன் மோதும்போது அவற்றுடன் ஐக்கியமாகிக் கொள்கின்றன. ரேடியோ கேலக்ஸிகள் என்ற கூட்டமும் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த கேலக்ஸி கூட்டங்களின் மையப்புள்ளியான பிளாக் ஹோலில் இருந்து அயோனைஸ்டு கற்றைகள் அதிவேகத்தில் வெளியாகும். விண்வெளியில் அதிசயிக்க வைக்கும் பிரம்மாண்டமான மற்றும் வியக்க வைக்கும் புகைப்படங்களை நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி தொடர்ந்தி வீரியத்துடன் எடுத்தனுப்பி வருகிறது. அந்த தொலைநோக்கியின் வியக்க வைக்கும் பணியில் 3 கேலக்ஸிகள் மோதிக்கொள்ளும் புகைப்படமும் இடம்பிடித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: