நேற்று இரவு சூப்பர் மூன் தோன்றியது!

நேற்று இரவு சூப்பர் மூன் தோன்றியது

2030-ல் தோன்றும் சூப்பர் மூன் அதுவரை தோன்றியதிலேயே புவிக்கு மிக நெருக்கமான சூப்பர் மூனாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
நிலவு அதன் சுற்றுப்பாதையில் புவிக்கு மிக அருகில் முழுமையாக தோன்றுவது சூப்பர் மூன். அந்த சமயத்தில் நிலவு வழக்கத்தைவிட புவிக்கு அருகாமையிலும் பெரிதாகவும் தோற்றமளிக்கும். 

சூப்பர் மூன் வருடத்தில் மிக சில முறைகள் மட்டுமே நிகழக்கூடியது. சூப்பர் மூன் என்ற சொல்லாடல் கடந்த 40 ஆண்டுகளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2016-ம் ஆண்டு நவம்பரில் தோன்றிய சூப்பர்மூன் கடந்த 69 ஆண்டுகளாக தோன்றியதிலேயே புவிக்கு மிக நெருக்கமாக தோறியதாக கூறப்படுகிறது.

2030-ல் தோன்றும் சூப்பர் மூன் இதுவரை தோன்றியதிலேயே புவிக்கு மிக நெருக்கமான சூப்பர் மூனாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் புவியைச் சுற்றிவரும் நிலவின் சுற்றுப்பாதை துள்ளியமானதாக இல்லை. சூரியன், புவி மற்றும் பல்வேறு கோல்களின் ஈர்ப்பு சக்தியே இதற்கு காரணம். எனவே, புவியில் இருந்து நிலவின் தொலைவு ஒரே மாதிரியானதாக இருப்பதில்லை. புவிக்கு நெருக்கமாகவும் தொலைவாகவும் நிலவு புவியை வெவ்வேறு தொலைவுகளில் சுற்றி வருகிறது.

சூப்பர் மூன் வழக்கத்தைவிட தோராயமாக 30 சதவீத அதிக வெளிச்சத்துடனும் 14 சதவீத அதிக அளவுடனும் தோன்றும். வழக்கத்தைவிட இதன் வேறுபாடு மிகச் சிறியதாக இருப்பதால் இதனை உரிய உபகரணங்களை பயன்படுத்தாமல் வெற்று கண்களால் உறுதிபடுத்த முடியாது.

Also see... வாக்குறுதியை வெளியே கூறமறுத்த சுயேட்சை வேட்பாளர்! 
Published by:Vaijayanthi S
First published: