Home /News /international /

பிரிட்டனில் நாளை பிரமாண்டமாக நடைபெறும் எலிசபெத் ராணியின் இறுதி சடங்கு... ஏற்பாடுகள் என்னென்ன?

பிரிட்டனில் நாளை பிரமாண்டமாக நடைபெறும் எலிசபெத் ராணியின் இறுதி சடங்கு... ஏற்பாடுகள் என்னென்ன?

ராணி எலிசபெத்தின் சவப்பெட்டி

ராணி எலிசபெத்தின் சவப்பெட்டி

ராணி எலிசபெத்தின் கிரீடம், சார்லஸின் மனைவியும் புதிய ராணியுமான கமீலாவிடம் ஒப்படைக்கப்படும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • interna, IndiaWinchesterWinchesterWinchesterWinchester
    பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நாளை அடக்கம் செய்யப்பட உள்ள நிலையில், அவரது இறுதிச் சடங்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் பிரம்மாணடமாக நடைபெறுகிறது.

    பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8ஆம் தேதி மரணமடைந்த நிலையில், அவரது உடல் கடந்த 4 நாட்களாக வெஸ்ட் மின்ஸ்டர் ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. ராணியின் உடலுக்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், இறுதிச் சடங்குகள், இந்திய நேரப்படி செப்டம்பர் 19ஆம் தேதி பிற்பகல 3:30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சடங்குகள் பழைய முறைப்படி இருந்தாலும், அதில் காலத்திற்கேற்ப சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதில், புதிய மன்னர் சார்லஸ், அவரது மனைவி கமிலா, ராணியின் பேரக்குழந்தைகள் வில்லியம், ஹாரி மற்றும் அவர்களது மனைவிகள் உள்ளிட்டோர் பங்கேற்பர். அப்போது அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரச குடும்பத்திற்கான பதக்கங்களுடன் உடைகளை அணிந்து வருவார்கள். அதே நேரத்தில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் சவப்பெட்டி மீது, அவரது கிரீடமும், நாட்டுக் கொடியும் வைக்கப்பட்டிருக்கும். அப்போது, காலாட்படை மற்றும் வீட்டு குதிரைப்படை என அனைத்தும் சுற்றி நிற்பதோடு, ராணுவ பிரிவினர் அணிவகுப்பு மரியாதை செலுத்துவார்கள்.

    இதையும் வாசிக்க: மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத் உடலுக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் அஞ்சலி

    அதை தொடர்ந்து, ராணியின் இறுதி ஊர்வலம் வின்ட்சரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தை நோக்கி புறப்படும்போது, பீரங்கி குண்டுகள் முழங்க மரியாதையும் செலுத்தப்படும். இந்த ஊர்வலத்தில், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்பு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போன்ற வெளிநாட்டுத் தலைவர்கள் உள்பட 2000க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். அப்போது அவர்கள், தனி விமானத்தை பயன்படுத்தக் கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதோடு, பிரிட்டன் அரசு ஏற்பாடு செய்துள்ள பேருந்துகளிலேயே பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், தலைவர்கள் அனைவரும் இந்த பேருந்துகளிலேயே பயணிப்பார்கள்.

    வெஸ்ட் மின்ஸ்டர் ஹாலில் தொடங்கும் ஊர்வலம், வின்ட்சர் கோட்டையை அடைந்ததும், அங்குள்ள புனித ஜார்ஜ் தேவாலய பேராயரிடம் ராணியின் உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டி ஒப்படைக்கப்படும். அங்கு மவுன அஞ்சலிக்குப் பிறகு, முப்படைகளின் இசை மரியாதை செலுத்தப்படும். அதைத் தொடர்ந்து, பிரார்த்தனையை தொடங்கும் பேராயரர் ஆசீர்வாதத்தை உச்சரிப்பார். அதன்பிறகு, ராணி எலிசபெத்தின் கிரீடம், சார்லஸின் மனைவியும் புதிய ராணியுமான கமீலாவிடம் ஒப்படைக்கப்படும். பின்னர், இந்திய நேரப்படி, நள்ளிரவு 12 மணியளவில் அங்குள்ள அரசக் குடும்பத்தினர் உடல் நல்லடக்கம் செய்யப்படும் இடத்தில், பெற்றோர், சகோதரி மற்றும் காதல் கணவர் பிலிப் ஆகியோருக்கு அருகில் இராண்டாம் எலிசபெத் ராணி அடக்கம் செய்யப்படுவார். எலிசபெத் ராணியின் இறுதிச் சடங்குக்கு, இந்திய மதிப்பில் ரூ. 75 கோடியும், பாதுகாப்பு பணிக்கு மட்டும் சுமார் ரூ.60 கோடியும் பிரிட்டன் அரசு செலவு செய்கிறது.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Britain, Funeral, Queen Elizabeth

    அடுத்த செய்தி