யூசர் டேட்டாவை டிராக் செய்வது ஏன்? கூகுளுக்கு நீதிபதி சரமாரி கேள்வி!

யூசர் டேட்டாவை டிராக் செய்வது ஏன்? கூகுளுக்கு நீதிபதி சரமாரி கேள்வி!

கூகுள் நிறுவனம்

யூசர்களிடம் தனிப்பட்ட தகவல்களை கேட்பது ஏன் என அமெரிக்க நீதிமன்றம் கூகுள் நிறுவனத்திற்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இன்காங்னிட்டோ (incognito) மோடில் கூட யூசர்களிடம் தனிப்பட்ட தகவல்களை கேட்பது ஏன் என அமெரிக்க நீதிமன்றம் கூகுள் நிறுவனத்திற்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

தொழில்நுட்பங்களின் வளர்ச்சியில் யூசர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவது அல்லது உளவு பார்க்கப்படுவது பெரும் அச்சத்துக்குரிய விஷயமாக மாறியுள்ளது. கூகுள் போன்ற மிகப்பெரிய டெக் ஜாம்பவான்கள் கூட யூசர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு பாதுகாப்பு கொடுப்பத்தில்ல என குற்றம்சாட்டப்படுகிறது. கூகுளில் இன்காங்னிட்டோ (incognito) விண்டோ என்ற அம்சம் உள்ளது.

இந்த விண்டோ மூலம் ஆன்லைனில் செயல்பாடுகளை மேற்கொள்ளும்போது, தேடல் வரலாறுகள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் உள்ளிட்டவற்றை கூகுள் நிறுவனம் சேமித்து வைத்துக்கொள்ளாது என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த முறைகளை கூகுள் நிறுவனம் பின்பற்றுகிறதா? என்ற கேள்வியை அமெரிக்க நீதிபதி ஒருவர் எழுப்பியுள்ளார். கூகுள் நிறுவனத்தின் மீது தனியுரிமை கொள்கைகளை மீறியதாக, வாடிக்கையாளர்களுக்கு 5000 அமெரிக்க டாலர் இழப்பீடு கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்ஜோஸ் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி லூசி ஹோ (Lucy Koh) கூகுள் நிறுவனத்திடம் யூசரின் தனியுரிமை தகவல்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பினார். இன்காங்னிட்டோ விண்டோ மூலம் மேற்கொள்ளும் இணைய தேடல்களின்போது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை கேட்பது ஏன் என நீதிபதி வினவினார். வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற நோக்கில், விசாரணையை அணுகிய கூகுள் நிறுவன வழக்கறிஞரிடம், விளம்பர நோக்கத்துக்காக யூசர்களின் டேட்டாவை சேகரிப்பதில்லை என கூறும் நிறுவனம், இணையதளங்களில் தனிப்பட்ட தகவல்களை கேட்பது வியப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Also read... மஹிந்திரா மற்றும் ஹீரோவுடன் இணையும் பிளிப்கார்ட்... எதற்கு தெரியுமா?

இன்காங்னிட்டோ விண்டோ மூலம் இணையத்தை பயன்படுத்துபவர்ளின் டேட்டா எவ்வாறு பாதுகாப்பாக இருக்கிறது என வினவியுள்ள நீதிபதி லூசி ஹோ, ஆன்லைனில் நீதிமன்ற பக்கத்துக்கு செல்பவர்களிடம் கூட தகவல்களை கேட்பதை எவ்வாறு எடுத்துக்கொள்வது என கூகுள் நிறுவனத்திடம் கேள்வி எழுப்பியுளார். இதற்கு கூகுள் நிறுவன வழக்கறிஞர், கூகுள் மூலம் தரவுகளை சேகரிக்கப்படுவதை தங்களால் மட்டுமே தடுக்க முடியும், தாங்கள் பாதுகாப்பான சேவையை வழங்கிவருவதாகவும் விளக்கி கூறினார். அவரின் பதிலை ஏற்க மறுத்த நீதிபதி, விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

கூகுள் இணையதளத்தில் மேற்கொள்ளப்படும் தேடல்களின் அடிப்படையில் தரவுகளை சேகரித்து விளம்பர நோக்கத்துக்காக அந்த நிறுவனம் பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. மேலும், இன்காங்னிட்டோ விண்டோ மூலம் மேற்கொள்ளும் தேடல்களின் வரலாறுகள் சேமித்து வைக்கப்படுவதாகவும், டேட்டா டிராக் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் பிரைவசி பாலிசியை கூகுள் நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் குழு எடுத்துக்கூறியபோதும், டேட்டா பதிவு தொடர்பாக அந்த நிறுவனம் மேற்கொள்ளும் நடைமுறைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: