திருமணத்தின் பெயரால் சீனாவுக்கு கடத்தப்படும் பாகிஸ்தான் இளம் பெண்கள்! அதிர்ச்சி அறிக்கை

பெற்றோர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு, மகள்களைத் திருமணம் செய்துவைக்கின்றனர். திருமணம் செய்யப்படும் பெண்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகின்றனர்.

news18
Updated: May 7, 2019, 10:20 PM IST
திருமணத்தின் பெயரால் சீனாவுக்கு கடத்தப்படும் பாகிஸ்தான் இளம் பெண்கள்! அதிர்ச்சி அறிக்கை
பாதிக்கப்பட்ட பெண்
news18
Updated: May 7, 2019, 10:20 PM IST
பாகிஸ்தானைச் சேர்ந்த ஏழை கிறிஸ்துவப் பெண்களை சீன இளைஞர்கள் திருமணம் எனும் பெயரில் கடத்திச் செல்வது அதிகரித்துள்ளது என்று புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் இரு நாட்டிலும் முக்கியப் பிரச்னையாக உருவெடுள்ளது.

சீனாவில் ஒரு குழந்தை திட்டத்தின் காரணமாக பாலின சமநிலையற்றத் தன்மை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆண்களுக்கு, நிகரான பெண்கள் இல்லாத சூழல் நிலவுவதால் வெளிநாட்டு மணப் பெண்களுக்கானத் தேவை அதிகரித்துள்ளது.

முன்னதாக, வியட்நாம், லாஓஸ், வடகொரியா ஆகிய நாடுகளிலிருந்து பெண்களை சீன இளைஞர்கள் திருமணம் செய்துவந்துள்ளனர். தற்போது, சீன இளைஞர்களின் கவனம், பாகிஸ்தானிலுள்ள ஏழைக் கிறிஸ்தவப் பெண்கள் பக்கம் திரும்பியுள்ளது. கடந்த ஒரு ஆண்டுகளில் ஏராளமான சீன இளைஞர்கள், பாகிஸ்தானிலுள்ள கிறிஸ்தவப் பெண்களைத் திருமணம் செய்துள்ளனர். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பாகிஸ்தானைச் சேர்ந்த 1000 பெண்களை சீன இளைஞர்கள் திருமணம் செய்திருப்பார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.


பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாகாணம்தான் சீனர்களின் குறிவைக்கும் பகுதியாக உள்ளது. இதற்கென, இந்தப் பகுதியில் ஏராளமான தரகர்கள் செயல்படுகின்றனர். சீனர்களின் வேலைவாய்ப்பு, சொத்து, குடும்பம் குறித்து பொய்யான தகவல்களைச் சொல்லி திருமணம் செய்துகொள்கின்றனர்.

இதுகுறித்து, அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு சமூக ஆர்வலர்கள் அளித்த பேட்டியில், ‘பெற்றோர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு, மகள்களைத் திருமணம் செய்துவைக்கின்றனர். திருமணம் செய்யப்படும் பெண்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகின்றனர். அவர்கள், கிராமங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றனர்’ என்று தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆசோசியேட் பிரஸ் நிறுவனத்துக்கு பேட்டி அளித்த பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையினர்களுக்கான அமைச்சர் இஜாஸ் அலாம் அகஸ்டின், ‘இது மனிதக் கடத்தல். பேராசைதான் இந்தப் பிரச்னைகளுக்கான முதற்காரணம். நான் சந்தித்த பெரும்பாலான பெண்கள் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். சீனத் தூதரகம், எந்த ஆதாரங்களையும் முறையாக சோதனை செய்யாமல் விசா வழங்கிவிடுகிறார்கள்’ என்று தெரிவித்தார்.

Loading...

பாகிஸ்தான் அமைச்சரின் குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. மனித உரிமை அமைப்பு கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில், ‘சீனாவில் பாகிஸ்தான் பெண்கள், பாலியல் அடிமைகளாக இருக்க வேண்டிய சூழல் அதிகரித்துள்ளது என்பதற்கான ஆவணங்கள் அதிகரித்துவருகின்றன’ என்று குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பு, ‘எட்டு சீனர்களையும், நான்கு பாகிஸ்தானியர்களையும் கைது செய்துள்ளது. இந்த விவகாரம் இரு நாட்டிலும் முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: May 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...