• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • US election Results 2020: அமெரிக்க அதிபர் தேர்தல் எப்படி நடைபெறுகிறது?

US election Results 2020: அமெரிக்க அதிபர் தேர்தல் எப்படி நடைபெறுகிறது?

அமெரிக்க தேர்தல் 2020

அமெரிக்க தேர்தல் 2020

அமெரிக்காவின் மொத்தமுள்ள 50 மாகாணத்தில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் எலெக்டர்களே அதிபரை தேர்வு செய்வர்.

  • Share this:
    மாநிலங்களில் கட்சி அளவிலான தேர்தல்கள் நடத்தப்பட்டு தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளர் யார் என்பதை இரு கட்சிகளும் முடிவு செய்யும். பின்னர் Electoral College உறுப்பினர்களை மக்கள் தேர்வு செய்யும் பொதுத்தேர்தல் நடத்தப்படும். தேர்வு செய்யப்பட்ட Electoral College உறுப்பினர்கள் அதிபரைத் தேர்வு செய்வர்.  தேர்வு செய்வோர் அவை எனப்படும் Electoral College அமெரிக்க அரசியலமைப்பால் நிறுவப்பட்ட ஒன்று. இது வாக்காளர்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அமைப்பாகும். இது அமெரிக்காவின் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் ஒரே நோக்கத்துக்காக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவாகிறது.

    ஒவ்வொரு மாநிலமும் அதன் மக்கள் தொகையின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான Electoral College பிரதிநிதித்துவத்தைப் பெறுகின்றன. உதாரணமாக, மிக அதிக மக்கள் தொகையைக் கொண்ட கலிபோர்னியா மாநிலத்துக்கு 55  அவை உறுப்பினர்கள் உண்டு. அதே போல மிகச் சிறிய மாநிலமான வெர்மாண்ட் மாநிலத்துக்கு 3 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்காவில் இன்று அதிபர் தேர்தல்.. உலகமே எதிர்பார்க்கும் தேர்தல் முடிவுகள்.. அடுத்த அதிபர் யார்?

    எலெக்டர்களைக் கொண்ட அமைப்பே 'எலக்டோரல் காலேஜ்' என்று அழைக்கப்படுகிறது. தேர்தல் நாளில் மறைமுகமாக தேர்தல் அவை உறுப்பினர்களையே மக்கள் தேர்வு செய்கின்றனர். அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்தல் அவை உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறுபடும். தேர்தல் அவையின் மொத்தமுள்ள 538 உறுப்பினர்களில் 270 பேரின் வாக்கினை பெறுவோரே அதிபராகும் வாய்ப்பை பெறுவர்.

    US election Results 2020: அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் கடந்துவந்த பாதை..

    ஒருமாகாணத்தில் ஒரு வேட்பாளர் பெரும்பான்மை மக்களின் வாக்கைப் பெற்றால், தேர்தல் அவை வாக்கும் அவருக்கே சேரும். தேர்தல் முடிந்த பின் தேர்தல் அவை உறுப்பினர்கள் வாக்களித்து அமெரிக்க அதிபரை தேர்வு செய்வார்கள்.

    மேலும் படிக்க.. அதிபர் தேர்தலில் தோற்றால் அமெரிக்காவை விட்டு வெளியேறுவேன் - ட்ரம்ப்



    பொதுத் தேர்தலுக்கு மறுநாளே வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும்; புதிய அதிபர் ஜனவரி 20- ஆம் தேதி பதவியேற்பார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: