இந்த உலகில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரினமும், ஏதாவதொரு வகையில் சூழலியலுக்கு தங்களின் பங்கை ஆற்றி வருகின்றன. சிறிய பூச்சி, செடி முதல் பெரிய விலங்குகள் மற்றும் மனிதர்கள் வரை என அனைவருக்கும் சூழலியலை பாதுகாப்பதில் பங்குண்டு. இதில் ஏற்படும் சிறிய அழிவு அல்லது பின்னடைவு கூட சூழலியல் சங்கிலியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்தவகையில் கடலுக்கடியில் வாழும் மிகப்பெரிய வேட்டை விலங்கான
சுறாவுக்கும், கடல் வளப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச் சூழலுக்கும் நெருங்கய தொடர்பு உண்டு. குறிப்பாக, உணவுச் சங்கிலி உடையாமல் இருப்பதை சுறா உறுதி செய்கிறது.
2007 ஆம் ஆண்டு நேஷ்னல் ஜியோகிராபிக்கில் வெளியான ஆய்வு ஒன்றில் அட்லாண்டிக் பெருங்கடலில் மிகப்பெரிய வெள்ளை சுறாக்கள் குறைவாக காணப்பட்டதாக தெரிவித்துள்ளது. இதனால், அந்தப் பகுதியில் கோவ்னோஸ் கதிர்களின் எண்ணிக்கை அதிகரித்து, ஸ்காலப்ஸ், கிளாம்கள் எனப்படும் மட்டி மற்றும் கடற் சிப்பிகளின் எண்ணிக்கையின் அளவு வெகுவாக குறைந்ததாக அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
அண்மைக்காலங்களில் சுறாக்களின் எண்ணிக்கை படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருவதாக வெளியாகும் தகவல்கள் பெரும் கவலையை ஏற்படுத்துகின்றன. சுறாக்களின் வீழ்ச்சி கடலின் தூய்மை மற்றும் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும் என கூறும் நிபுணர்கள், கடற்புற்களின் நிலையும் மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். கடற் புற்கள் தண்ணீரை தெளிவாக வைத்திருக்கவும், ஏராளமான உயிரினங்களின் தங்குமிடமாகவும், அதற்கான உணவையும் கொடுக்கிறது. மேலும், கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியேற்றத்தை தடுத்து, கிரீன்ஹவுஸ் வாயுக்களின் சேகரிப்பானாகவும் உள்ளது.
வளைகுடா பகுதிகளில் கடற்புற்கள் போதுமான அளவில் இருப்பதை டைகர் சுறாக்கள் உறுதி செய்து வந்தன. வெப்பத்தை விட குறைவான அளவில் கார்பனை உறிஞ்சுபவையாக இருந்தாலும், சுறாக்களின் பற்றாக்குறையால் அப்பகுதிகளில் புற்கள் அதிகரித்துள்ளன. அப்பகுதியில் இருக்கும் ஆமை மற்றும் கடற்புலிகள் இதனால் அதிக மேய்சலை எடுக்கும் கடல் உயிரினங்களாக மாறியுள்ளன. இது காலப்போக்கில் கடற்புலிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி, அந்த இனத்தின் அழிவுக்கான புள்ளியாக மாற வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இவையெல்லாம் ஒட்டுமொத்த உலகளாவிய அளவில் ஏற்பட்டு வரும் கால நிலை மாற்றத்தின் அறிகுறிகள் என எச்சரிக்கும் ஆய்வாளர்கள், கடல் வளத்துக்கு இது நல்லதல்ல என கூறுகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும், சுறாக்களும் குறிப்பிட்ட அளவு கார்பனை தேக்கி வைப்பவையாக இருக்கின்றன எனவும் குறிப்பிடுகின்றனர். பவளப்பாறைகளின் பாதுகாவலனாக இருந்த சுறாக்களின் வீழ்ச்சியால் தாவரவகை மீன்கள் பவளப்பாறைகளை சேதப்படுத்துவது அதிகரிக்கும் எனவும், இதனால் ஒட்டுமொத்த கடலின் சங்கிலியை பாதிக்கத் தொடங்கும் எனவும் தெரிவிக்கும் நிபுணர்கள், இவையனைத்தும் காலநிலை மாற்றத்தினால் உருவாகும் பாதிப்பு என்பதை அடிகோடிட்டு காட்டுகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.