தொடக்கத்தில் கொரோனா வைரஸ் எந்தெந்த நாடுகளில், எப்படி பரவியது?

கொரோனா பரவலைத் தடுப்பதற்கு, யார் மூலம், எங்கிருந்து வைரஸ் பரவியது என்பதை கண்டுபிடிக்க வேண்டியது மிக மிக அவசியம். இதைத்தான் 'கிளஸ்டர்' என்று அழைக்கிறோம்.

  • Share this:
கொரோனா பரவலைத் தடுப்பதற்கு, யார் மூலம், எங்கிருந்து வைரஸ் பரவியது என்பதை கண்டுபிடிக்க வேண்டியது மிக மிக அவசியம். இதைத்தான் 'கிளஸ்டர்' என்று அழைக்கிறோம்.

இந்த கிளஸ்டரை கண்டுபிடிப்பதன் மூலம் ஒட்டுமொத்த கவனத்தையும் அதன் மீது திருப்பி வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க முடியும். உலகத்தில் கொரோனா அதிகம் பரவிய நாடுளில் இந்த கிளஸ்டர்கள் எங்கிருந்து உருவாகின என்பதை பார்ப்போம்.

படம்: Reutersசீனாவில், ஊஹான் நகரத்தில் உள்ள மீன் மார்க்கெட் கொரோனா முதன்முதலில் பரவிய இடமாக கண்டறியப்பட்டது. இந்த மார்கெட்டிற்கு சென்று வந்தவர்களில் 41 பேருக்கு கொரானா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து நகரம் முழுவதும் கொரோனா வேகமாக பரவியது.

படம்: Reuters

இத்தாலியில் உள்ள லொம்பார்டி பகுதியை சேர்ந்த 38 வயது நபர், சீனாவிலிருந்து திரும்பிய தனது நண்பரை சந்தித்தன் மூலம் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மூலம் அவர் மனைவிக்கும் பிறகு பலருக்கும் கொரோனா பரவியது.
படம்: Reuters

பிரான்ஸ் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துவ மாநாட்டில் உலகின் பல நாடுகளிலிருந்தும் மக்கள் கலந்துகொண்டனர். அந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்களின் மூலம் பிரான்சில் கொரோனா பரவியது. அந்த மாநாட்டில் கலந்துகொண்ட 2500 பேருக்கு கொரரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரான்சில் கொரோனா வேகமாக பரவியது.

(படம்: Reuters)

சிங்கப்பூரில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்ள வந்தவர்கள் தங்கிருந்த ஓட்டலில் 7 பேருக்கு முதன்முதலில் கொரானா உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சிங்கப்பூரில் கொரோனா பரவியது.

(படம்: Reuters)

ஆஸ்திரியாவில் உள்ள பனிச்சறுக்கு உல்லாச விடுதியில் வெளிநாடுகளிலிருந்து வந்திருந்தவர்களுக்கு கொரேனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மூலம் ஆஸ்திரியாவில் கொரோனா பரவியது.

(படம்: Reuters)

ஜப்பானில் முதன்முதலில் ஒரு முதியோர் விடுதியில் கொரானா பாதிப்பு கண்டறியப்பட்டது. வயது முதிர்ந்தவர்கள் அதிகம் உள்ள ஜப்பானில், அந்த ஒரு விடுதியில் மட்டும் 50 பேருக்கு கோரானா உறுதி செய்யப்பட்டது.

Also see:
First published: April 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading