அமெரிக்க அதிபர் தேர்தல் எப்படி நடைபெறுகிறது? இந்தியத் தேர்தலிலிருந்து எப்படி மாறுபடுகிறது?

உலகத்தின் மிகவும் பழமைவாய்ந்த மற்றும் வலிமையான ஜனநாயக நாடான அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தல் எப்படி நடைபெறுகிறது? இந்தியத் தேர்தலிலிருந்து எப்படி மாறுபடுகிறது?
ஜோ பைடன் | டொனால்ட் ட்ரம்ப்
  • Share this:
உலகத்தில் நான்கு வகையான அரசமைப்பு முறைகள் நடைமுறையில் இருந்துவருகின்றன. அவை, அதிபர் முறை, நாடாளுமன்ற ஜனநாயகம், ஸ்விஸ் முறை மற்றும் கம்யூனிசம். அமெரிக்க அதிபர் முறையை தேர்வு செய்துள்ளது. அதன்படி, அமெரிக்க அதிபர்தான் அந்நாட்டின் தலைவர் ஆவர். அமெரிக்காவில் அதிபர் எப்படி தேர்வு செய்யப்படுகிறார் என்று தெரிந்துகொள்வோம். அமெரிக்காவின் அதிபர் தேர்தலைப் புரிந்துகொள்ள 244 ஆண்டுகள் பழமையான ஜனநாயகத்தை நினைவுகூற வேண்டும். அமெரிக்காவில், அதிபர் தேர்தல் எப்போது நடைபெறும்? தேர்தல் முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும்? புதிய அதிபர் எப்போது பதவியேற்பார் என்பது மாறாதது.

இந்தியாவில் நடைபெறும் பொதுத் தேர்தலிலிருந்து அமெரிக்காவில் நடைபெறும் முதற்கட்டத் தேர்தல் வேறுபட்டது. இந்தியாவில் 2024-ம் ஆண்டு எந்த தேதியில் தேர்தல் நடைபெறும் என்பது தற்போது நமக்குத் தெரியாது. ஆனால், அமெரிக்காவில் 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தல் எந்த தேதியில் நடைபெறும் என்று அனைவருக்கும் தெரியும்.

அமெரிக்காவில் லீப் வருடத்தில் அதிபர் தேர்தல் நடைபெறும். அதாவது நான்கு வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின்போதும் கூட அமெரிக்க அதிபர் தேர்தல் அந்த நேரத்தில் சரியாக நடைபெற்றது என்பதை அறிந்துகொள்வது முக்கியம்.


அமெரிக்காவில் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு முறையும் எந்த தேதியில் வாக்குப் பதிவு நடைபெறும்? எந்த தேதியில் புதிய அதிபர் பதவியேற்பார் என்பதும் அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு நடைபெறும். அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி புதிய அதிபர் பதவியேற்பார்.

அதிபர் வேட்பாளர் அதிக வாக்குகளைப் பெற்றாலும் அவர் தோல்வியடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 2016-ம் ஆண்டு தேர்தலின்போது ஹிலாரி கிளிண்டன் அதிக வாக்குகளைப் பெற்றார். ஆனால், டொனால்ட் ட்ரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.

அமெரிக்க மக்கள், அவர்களது அதிபர்களை நேரடியாகத் தேர்ந்தெடுக்க முடியாது. அந்நாட்டின் மக்கள் தேர்வுக் குழுவுக்கு(electoral college) வாக்களிப்பார்கள். அமெரிக்க காங்கிரஸ் என்று அழைக்கப்படும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அதே எண்ணிக்கையிலான உறுப்பினர்களை தேர்வுக் குழுவும் கொண்டிருக்கும். அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரு அவைகள் உள்ளன. ஒன்று செனட் மற்றொன்று பிரதிநிதிகள் சபை(House of Representatives). செனட் என்பது மேலவை. பிரதிநிதிகள் சபை என்பது கீழவை.இந்தியாவில் மேலவைக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் முறையிலிருந்து அமெரிக்காவில் தேர்ந்தெடுக்கும் முறை முற்றிலும் மாறுபட்டது. இந்தியாவில் மாநிலங்களவைக்கான உறுப்பினர்களை மக்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கும்போது, அமெரிக்காவில் செனட் உறுப்பினர்களை அந்நாட்டு மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கின்றனர்.

அமெரிக்காவில் பிரதிநிதிகள் சபையில் 435 உறுப்பினர்கள் கூடுதலாக 3 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் இந்த மூன்று உறுப்பினர்கள் வாஷிங்டன் டிசியைச் சேர்ந்தவர்கள். அந்தப் பகுதி, அந்நாட்டில் சிறப்பு பகுதியாக உள்ளது. செனட்டில் 100 உறுப்பினர்கள் உள்ளனர்.

தேர்வுக் குழுவில் ஒவ்வொரு மாநிலங்களும் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்டில் வரையறுக்கப்பட்ட இடத்தைக் கொண்டுள்ளன. இந்தியாவைப் போலவே அமெரிக்காவிலும் பலகட்சி நடைமுறை இருந்தாலும், இரண்டு கட்சிகள் தான் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிகள் தான் அந்த இரண்டு கட்சிகள்.

விர்ச்சுவல் முறையில் பிரசாரம் செய்ய டிரம்ப் திட்டம்...?


அமெரிக்க தேர்வுக் குழுவுக்கான தேர்தலின்போது லிஸ்ட் சிஸ்டம் பொருந்தும். லிஸ்ட் வெற்றியடைகிறதா? அல்லது தோல்வியடைகிறதா? என்பதுதான் இதன் அர்த்தம். ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி கலிபோர்னியா மாகாணத்துக்கு 55 வேட்பாளர்களை அறிவிப்பார்கள். இந்த 55 பேருக்கு வாக்காளர்கள் தனித்தனியாக வாக்களிக்க மாட்டார்கள். ஜனநாயக கட்சி மற்றும் குடியரசுக் கட்சி வெளியிட்ட மொத்தமாக 55 வேட்பாளர்களுக்கும் வாக்களிப்பார்கள். அதன்மூலம், ஒரு கட்சியின் 55 உறுப்பினர்களும் வெற்றி பெற முடியும் அல்லது அனைவரும் தோல்வியடைய முடியும். அதனால், தேர்வுக்கு குழுவுக்கு குறைவான வாக்குகளைப் பெற்றாலும் ட்ரம்ப் வெற்றி பெற முடிந்தது.

பிரசிடென்ஸி பிரைமரிஸ் முறை என்பது என்ன?

இன்னும் ஒருவகையில் அமெரிக்கத் தேர்தல் இந்தியத் தேர்தல் மற்றும் மற்றவேற நாடுகளின் தேர்தல்களிலிருந்து வேறுபடுகிறது. இந்தியாவில் பா.ஜ.க அல்லது காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை யார் தேர்வு செய்வார்கள். அக்கட்சித் தலைமைதான் தேர்வு செய்யமுடியும். மக்களால் தேர்வு செய்ய முடியாது. ஆனால், அமெரிக்காவில் ஜனநாயக் கட்சி அல்லது குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரை அந்நாட்டு மக்கள் தேர்வு செய்வார்கள். கட்சிக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை.

இந்தியாவில் 10 கட்சி உறுப்பினர்கள் உட்கார்ந்து அவர்களுடைய கூட்டணி கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை தேர்வு செய்வார்கள். அமெரிக்காவில் ஒரு கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள் தங்களை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பார்கள். ஆனால், அந்தக் கட்சியின் இறுதியான பிரதமர் வேட்பாளர் யார் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்.

அமெரிக்காவில் சங்கிலி முறை உள்ளது. அமெரிக்காவில் அதிபர் வேட்பாளர் மக்கள் மற்றும் அந்தக் கட்சியின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதுதான் பிரசிடென்ஸி பிரைமரிஸ் என்றழைக்கப்படுகிறது. இந்த நடைமுறை 1970-ம் ஆண்டிலிருந்து உள்ளது. பிரசிடென்ஸி பிரைமரிஸ் அமெரிக்காவிலுள்ள 34 மாநிலங்களில் பின்பற்றப்படுகிறது. மீதமுள்ள 16 மாநிலங்களில் காக்கஸ் முறை உள்ளது. பிரசிடென்ஸி பிரைமரிஸ் முறையில் அதிபர் வேட்பாளர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார். காக்கஸ் முறையில் கட்சியின் முக்கியத் தலைவர்கள் அதனைத் தேர்ந்தெடுப்பார்கள்.

இதற்காக அமெரிக்காவில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு அளித்த பரிந்துரையை சில கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால், சில கட்சிகள் நிராகரித்துள்ளன. இதுகுறித்து அரசியலமைப்புச் சட்டம் எதுவும் கிடையாது.


பிரசிடென்ஸி ப்ரைமரிஸின் பணியாட்கள் அவர்களுடைய தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள் அல்லது தேசிய மாநாடுக்காக தேர்தல் நடைபெறும். தேசிய மாநாட்டில் இரண்டு கட்சிகளுக்கும் தொடர்பில்லாத பிரதிநிதிகள்(Delegates) மற்றும் சூப்பர் பிரதிநிதிகள்(Superdelegates) இருப்பார்கள்.

பிரதிநிதிகள் மற்றும் சூப்பர் பிரதிநிதிகளுக்கான வித்தியாசங்கள் என்னென்ன?

மாநிலங்களிலிருந்து தேசிய மாநாடுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பிரதிநிதிகள்(Delegates )என்று அழைக்கப்படுகின்றனர். ஏற்கெனவே அந்தக் கட்சியில் அதிபராக இருப்பவர்கள் அல்லது முன்னாள் அதிபர்கள் மற்றும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சூப்பர் பிரதிநிதிகள்(Superdelegates) என்று அழைக்கப்படுவார்கள். இந்தத் தேர்தல் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும். இந்த தேசிய மாநாட்டில் இறுதி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதில், குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர்கள் யார் என்பதைத் தேர்ந்தெடுக்கும். இந்த தேசிய மாநாடு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு தேதியில் நடைபெறும். இந்த முழு நடைமுறையும் ஒரு மாதமாக நடைபெறும்.

அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுபவர், அவர்கள் துணை அதிபரின் பெயரைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்த தேர்வு முடிந்தபிறகு, பிரச்சாரத்துக்கு செப்டம்பர் அக்டோபர் இரண்டு மாத கால அவகாசம் உண்டு. இந்த இரண்டு மாத காலத்தில் பில்லியன்கணக்கான டாலர்கள் பிரச்சாரத்துக்காக செலவிடப்படுகிறது. அதனால், உலகின் மிகவும் விலையுயர்ந்த தேர்தலாக அமெரிக்க அதிபர் தேர்தல் பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரம் எப்படி நடைபெறுகிறது?

நாம் இந்தியாவில் பார்ப்பது போல அமெரிக்காவில் ஏராளமான பேரணிகள் நடைபெறாது. அங்கு, தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடைபெறும். இரண்டு கட்சிகளின் வேட்பாளர்கள் தொலைக்காட்சிகளில் நேரலை விவாதங்களில் பங்கேற்பார்கள்.
இந்த நடைமுறைகளுக்குப் பிறகு நவம்பர் மாத முதல் செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அன்றைய தேதியில் அமெரிக்க மக்கள் தேர்வுக் குழு உறுப்பினர்களுக்கு வாக்களிப்பார்கள். அமெரிக்கா முழுவதும் ஒரே நாளில் தேர்தல் நடைபெறும். அதேதேதியில், அதிபருக்கான தேர்தல், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்கள், ஆளுநர்களுக்கும் தேர்தல் நடைபெறும்.

தேர்ந்தெடுக்கப்படும் தேர்வுக் குழு உறுப்பினர்கள் தங்களது கட்சியைச் சேர்ந்த அதிபருக்குதான் வாக்களிக்கவேண்டும் என்று எந்த அரசியலமைப்பு கட்டாயமும் கிடையாது. 270-க்கும் அதிகமான வாக்குகளைப் பெறுபவர்கள் அதிபராக வெற்றி பெறுவார்கள். அதன்பிறகு, ஜனவரி 20-ம் தேதி அதிபராக பதவியேற்பார்.

ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் யார் யார்?

குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோபிடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜோபிடன் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டிரம்ப் அவருடைய துணை அதிபர் வேட்பாளராக மைக் பெனஸை தேர்ந்தெடுத்துள்ளார்.
First published: October 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading