Home /News /international /

2020-ம் ஆண்டு முழுவதும் உலக நாடுகளை கட்டிப்போட்ட கொரோனா வைரஸ்: ஒரு பார்வை!

2020-ம் ஆண்டு முழுவதும் உலக நாடுகளை கட்டிப்போட்ட கொரோனா வைரஸ்: ஒரு பார்வை!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

2020 ஆண்டு அதன் நிறைவை நெருங்கி வரும் அதேநேரத்தில், இங்கிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மெக்ஸிகோ மற்றும் இன்னும் சில நாடுகளில் தடுப்பூசிகளின் பயன்பாடு தொடங்கியுள்ளன.

  • News18
  • Last Updated :
COVID-19-ஐ ஏற்படுத்தும் SARS-CoV2 என்ற கொரோனா வைரஸ், இந்த ஆண்டு புயல் போல உலகத்தை தாக்கியது. கடந்த 12 மாதங்களில், உலகளவில் இந்த தொற்றால் சுமார் 80 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் உயிர்களைக் இந்த வைரஸ் காவு வாங்கியது. முதன் முதலாக சீனாவின் வுஹான் (Wuhan) நகரத்தில் பல மக்கள் இனம் புரியாத வைரஸ் காரணமாக நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 31 தேதி அன்று, உலக சுகாதார அமைப்பின் (WHO) சீன அலுவலகம் வுஹானில் பலர் நிமோனியாவால் பாதிக்கப்பட காரணமாக இருந்த அந்த அறியப்படாத வைரஸ் பற்றிய அறிக்கையைப் பெற்றது. மேலும், அந்த வைரஸ் நவம்பர் 2019 இல் நகரத்தின் ஈரமான சந்தையில் முதன்முதலில் தோன்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அறிக்கை கிடைத்த பிறகு அதிகாரிகள் அமைதியாக அந்த சந்தையை மூடிவிட்டனர். பின்னர் 2020ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி அன்று சீன அதிகாரிகள் புதிய வைரஸை அடையாளம் கண்டுள்ளதாக அறிவித்தனர். இது 2019-nCoV என்று அழைக்கப்பட்டது. பின்னர் இது SARS-CoV2 என மறுபெயரிடப்பட்டது.

இந்த மர்ம வைரஸ் இவ்வளவு பெரிய அளவில் வெடிக்கும் என்பதற்கான எந்த அறிகுறிகளையும் அறிக்கைகள் கொடுக்கவில்லை. உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படும், மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கி இருப்பார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஜனவரி 11ம் தேதி, சீனா தனது முதல் மரணத்தை அறிவித்தது. 67 வயதான வுஹான் மனிதர் வைரஸால் பாதிக்கப்படுவதற்கு முன்பு வுஹானின் மிகப்பெரிய கடல் உணவு சந்தைக்கு விஜயம் செய்திருந்தார். அதன்பிறகு ஜனவரி 23-க்குள், சீனா வுஹானையும் அதன் அண்டை நகரங்களையும் உலகின் பிற பகுதிகளிலிருந்து துண்டித்து, 50 மில்லியன் மக்களை தனிமைப்படுத்தியது. நகருக்குள் பேருந்துகள், சுரங்கப்பாதைகள் மற்றும் படகு சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. விமானம் மற்றும் ரயில் பயணம் நிறுத்தப்பட்டது.

வுஹான் வீதிகளில் நிலவி வந்த மவுனம், ஸ்டீவன் சோடர்பெர்க்கின் ஹாலிவுட் திரைப்படமான "Contagion"-ல் வரும் ஒரு காட்சியை ஒத்திருந்தது. இதைடுத்து பிப்ரவரி 1-ம் தேதி வுஹானில் இருந்த இந்தியர்களை விமானம் மூலம் அனுப்பத் தொடங்கியது. அப்போது சீனாவில் இந்த வைரஸால் 17 பேர் உயிரிழந்திருந்தனர். தொடர்ந்து இரண்டு வாரங்களில், சுகாதார நெருக்கடியை தனது நாடு தவறாக கையாண்டதை அம்பலப்படுத்தியதற்காக வில்லனாக மாற்றப்பட்ட விசில்ப்ளோவர் சீன மருத்துவரான லி வென்லியாங் கொரோனவால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த கொரோனா வைரஸால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 20 மில்லியன் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் இறப்பு எண்ணிக்கை 300,000-ஐ தாண்டியுள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை, பத்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 1,50,000 இந்தியர்கள் வைரஸ் பரவலுக்கு காரணமாகியுள்ளனர். இந்த வைரஸ் குறிப்பாக மூத்த குடிமக்கள் மீது கொடூரமான விளைவுகளை காட்டி வருகின்றன. முகக்கவசங்கள், கிருமி நாசினிகள் வீட்டு அத்தியாவசிய பொருட்களாக மாறியது, வீட்டில் இருந்தபடியே வேலை (WFH) பார்ப்பது புதிய இயல்பாக மாறியது.

சீனாவில் இருந்து பிற நாடுகளுக்கு பரவ ஆரம்பித்த இந்த வைரஸின் முதல் நிகழ்வு, கடந்த பிப்ரவரி மாதத்தில் டயமண்ட் இளவரசி எனும் கப்பலில் பயணித்த பாதிக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சம்பவம் தான். யோகோகாமா துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதையில் ஒரு பயணி கொரோனவால் பாதிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். மேலும் கப்பலில்  3600-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அதில் 700 பேர் பாதிக்கப்பட்டனர். 14 பேர் உயிரிழந்தனர்.

கடந்த பிப்ரவரி 14ம் தேதி அன்று, ஐரோப்பாவில் கொரோனாவால் ஏற்பட்ட முதல் மரணத்தை பிரான்ஸ் நாடு அறிவித்தது. பின்னர் இது சீனாவில் அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கையுடன் ஒத்துப்போனது. வைரஸால் ஏற்பட்ட இறப்புகளில் பெரும்பகுதி ஹூபே மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து இத்தாலியில் பரவ ஆரம்பித்த வைரஸ் முதலில் மிலனில் பிராந்தியம் பின்னர் லோம்பார்டி பிராந்தியத்தில் என 10 நாட்களில் இத்தாலி முழுவதும் வைரஸ் காட்டுத்தீ போல் பரவியது. மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஏராளமான வயதான மருத்துவர்கள் வைரஸால் உயிரிழந்தனர்.

இத்தாலி ஐரோப்பாவில் வெப்பமான இடமாக இருந்தபோது, ஈரான் பிப்ரவரியில் வைரஸ் பாதிப்பின் இரண்டாவது மைய புள்ளியாக உருவெடுத்தது. பிப்ரவரி மாத இறுதியில், பிரேசில் தனது முதல் பாதிப்பை பதிவுசெய்தது. அப்போது அமெரிக்கா அதன் முதல் கொரோனா மரணத்தைப் பதிவு செய்தது. இதையடுத்து மிக தாமதமாக வந்த உலக சுகாதார அமைப்பு (WHO) கடந்த மார்ச் 11ம் தேதி அன்று கொரோனா வைரஸை உலகளாவிய தொற்றுநோயாக அறிவித்தது. மார்ச் 13 அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு தேசிய அவசரநிலையை அறிவித்தார். 50 க்கும்  மேற்பட்ட கூட்டங்கள் தடைசெய்யப்பட்டன. நியூயார்க் அதன் பொதுப் பள்ளிகளை மூடியது. மார்ச் 24 அன்று, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டன. ஒலிம்பிக் வரலாற்றில், விளையாட்டுக்கள் இதுவரை மூன்று முறை மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளன. முதல் இருமுறையும் இரண்டு உலகப் போர்கள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 26ம் தேதி, சீனா மற்றும் இத்தாலியை விஞ்சிய அளவுக்கு  அதிகபட்ச தொற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கையை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மாஸ்கோவிலும், பாதிப்புகளின் எண்ணிக்கை பெரிய அளவில் காணப்பட்டது மற்றும் ஒரு வாரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியது. மே மாதத்தில், பல அமெரிக்க நகரங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி வலதுசாரி சார்பில் போராட்டங்கள் வெடித்தன. ஜூன் மாதத்திற்குள், உலகெங்கிலும் அறியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்தது. ஒரு நாளைக்கு 100,000க்கும் மேற்பட்ட புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகின. ஜூன் மாத நடுப்பகுதியில், லத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா, தெற்காசியா மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட உச்சகட்ட பரவல் தொடர்ந்து உலகளாவிய வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையை அதிகரித்தன.

இந்த நிலையில் இந்தியா தனது முதல் கொரோனா பாதிப்பை ஜனவரி 30ம் தேதி அறிவித்தது. வுஹானில் இருந்து திரும்பிய கேரள இளைஞர் கொரோனவால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளியாக கண்டறியப்பட்டார். பின்னர் மார்ச் 12ம் தேதி முதல் மரணம் நிகழ்ந்தது. கர்நாடகாவின் கல்பூர்கியைச் சேர்ந்த 76 வயது நபர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். அவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை 21 நாட்களுக்கு நாடு தழுவிய முதல் ஊரடங்கு அறிவிப்பை வெளியிட்டார். பின்னர் வழக்குகள் அதிகரித்ததால் ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. கடுமையான ஊரடங்கு வணிகங்களை பாதித்தது. ஏழை மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வேலையில்லாமல், அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த கிராமங்களை அடைய நெடுஞ்சாலைகளில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் நடந்து செல்வது தொற்றுநோயின் வரையறுக்கப்பட்ட உருவமாக மாறியது. பலர் உண்ண உணவில்லாமல் நூற்றுக்கணக்கான மயில்கள் நடந்து சென்றதால் உயிரிழந்தனர்.

அதுவே, பேருந்துகள் மற்றும் ரயில்களை ஏற்பாடு செய்ய அரசாங்கத்தை தூண்டியது. பெரிய நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை, அகமதாபாத் ஆகியவற்றில் வைரஸ் பாதிப்புகள் மே மாத இறுதிக்குள் பெரும் ஏற்றம் கண்டன. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த வீடுகளை அடைந்ததும், ஜூன் மாதத்தில் கிராமங்களிலும் வைரஸ் தொற்று வேகமாக பரவியது. அதன்பிறகு கடந்த செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்தியா கட்டுப்பாடுகளை தளர்த்தியது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் தவிர அனைத்து நடவடிக்கைகளும் மீண்டும் தொடங்கப்பட்டன.

இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் பணியிடங்களுக்கு திரும்பிச் செல்லத் தொடங்கியுள்ளனர். அரசாங்க மற்றும் தனியார் அலுவலகங்கள் குறைக்கப்பட்ட ஊழியர்களின் பலத்துடன் செயல்படுகின்றன என்றாலும், இந்தியா மீண்டும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க களமிறங்கியுள்ளது. இந்த ஆண்டின் கடைசி வாரத்தில் மும்பை தாராவி பூஜ்ஜிய பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. அதேபோல இந்திய மாநிலங்களில் நோய்த்தொற்றுகள் வெகுவாகக் குறைந்துவிட்டன. அதனால் மக்களிடையே சற்று பயம் நீங்கிவிட்டது என்று சொல்லலாம். இந்த கொரோனா வைரஸ் ஏழை பணக்காரர் என்று பாகுபாடு பார்க்கவில்லை. இது முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மூத்த காங்கிரஸ் தலைவர்களான தருண் கோகோய் மற்றும் அகமது படேல், ஃபிலாய்ட் கார்டோசோ, நாடக ஆசிரியர் டெரன்ஸ் மெக்னலி ஆகியோரின் உயிரைப் பறித்தது.

அதேபோல பல மாதங்களாக முகக்கவசங்களை போட மறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்பையும் போட வைத்தது. இவர் கடந்த ஜூலை மாதம் முதல் முறையாக முகக்கவசத்தை அணிந்தார். டிரம்ப் கடந்த அக்டோபரில் SARS-CoV-2 வைரஸால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தார். இவரை போல வைரஸால் பாதிப்பட்டு குரணமடைந்த உலக பிரபலங்களில், பிரேசில் தலைவர் ஜெய்ர் போல்சனாரோ, பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், நடிகர் டாம் ஹாங்க்ஸ், கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச், பாடகர் மடோனா, இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசர் ஆல்பர்ட் II ஆகியோரும் அடங்குவர்.

குறிப்பாக கொரோனா வைரஸ் உலகப் பொருளாதாரத்தில் பேரழிவு தரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் உள்ள பொருளாதாரங்கள் ஊரடங்கு தாக்கத்தால் நொறுங்கின. சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund - IMF) ஏப்ரல் மாதத்தில் உலகப் பொருளாதாரத்தின் பெரும் மந்தநிலைக்குப் பின்னர் அதன் மோசமான வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என்று எச்சரித்தது. 2009ல் ஏற்பட்ட நிதி நெருக்கடியை விட நான்கு மடங்கு மோசமாக இருந்தது. ஒரு சில வாரங்களில், தொற்றுநோய் கிட்டத்தட்ட 10 மில்லியன் அமெரிக்கர்களை வேலையின்மை நிலைக்கு தள்ளியது.

அதேபோல ஊரடங்கு 2020-21 முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரத்தை 23.9% சுருக்கியது. மே மாத நடுப்பகுதியில், வளர்ந்த நாடுகளான ஜப்பான், ஜெர்மனி போன்றவை மந்தநிலையுடன் பிணைந்தன. இந்த வைரஸ் விமான போக்குவரத்து, கட்டுமானம், ஆட்டோமொபைல், ஹோட்டல் மற்றும் விருந்தோம்பல் தொழில்களில் ஒரு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது. எவ்வாறாயினும், சீனாவின் பொருளாதாரம் முதன்முதலில் மீண்டும் முன்னேறியது மற்றும் 2020 ஆம் ஆண்டில் வளர்ந்த ஒரே பொருளாதார நாடாக சீனா திகழ்ந்தது.

வளர்ந்த நாடுகள் பல, பலவீனமான சுகாதார அமைப்புகள் இன்னும் போதுமான படுக்கைகள், பொருட்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக்குறையுடன் போராடி வருகின்றன. அதே நேரத்தில் தென் கொரியா, தைவான், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகள் தொற்றுநோயை நன்கு கையாண்டுள்ளன. இந்தியாவில், கொரோனா வைரஸ் 500-க்கும் மேற்பட்ட மருத்துவர்களின் உயிரைப் பறித்ததாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. ஒருபுறம் விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் வெறித்தனமாக இந்த தொற்றுநோய்க்கு தீர்வுகளைத் தேடினாலும், தடுப்பூசிகள் குறித்த நிலையான நம்பிக்கை வெகுவாக குறைந்தது. இந்த நிலையில் டிசம்பர் மாத முதல் வாரத்தில், ஆண்டு முடிவதற்கு சற்று முன்னதாக, ஃபைசர்-பயோஎன்டெக் ஜப் என்ற தடுப்பூசிக்கு ஒப்புதல் பெற்ற முதல் நாடாக பிரிட்டன் உருவெடுத்தது.

Also read... தென் ஆஃப்ரிக்காவில் பரவும் புதிய வகை கொரோனா: இங்கிலாந்தில் உருமாறியதைவிட வேகமாகப் பரவுகிறதா?

ஆனால் அதற்குள் கொரோனா வைரஸின் புதிய உருமாற்றம் இங்கிலாந்தில் பரவ தொடங்கியுள்ளது. இது70% அதிக வீரியத்தை கொண்ட தொற்றாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உலகெங்கிலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் விமர்சையாக நடந்து வரும் சமயத்தில் பிரிட்டன் அரசாங்கம் மீண்டும் கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. எல்லைகள் மூடப்பட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

2020 ஆண்டு அதன் நிறைவை நெருங்கி வரும் அதேநேரத்தில், இங்கிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மெக்ஸிகோ மற்றும் இன்னும் சில நாடுகளில் தடுப்பூசிகளின் பயன்பாடு தொடங்கியுள்ளன. மேலும் அதற்கான ஒழுங்குமுறை ஒப்புதல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவும் சுகாதார, முன்னணி தொழிலாளர்கள் மற்றும் வயதான மக்களுக்கு தடுப்பூசி போட தயாராகி வருகிறது. இருப்பினும் இந்த தடுப்பூசிகள் மூலம் ஹெர்ட் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க பல ஆண்டுகள் ஆகலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் கோவிட் -19 எனப்படும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் பரவல் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Corona virus, YearEnder 2020

அடுத்த செய்தி