இது ஒரு Recycling புரட்சி.. குழந்தைகளின் டயப்பர்களை உரமாக மாற்றும் நிறுவனம் பற்றி தெரியுமா?

டயப்பர்களை உரமாக மாற்றும் நிறுவனம்

2 வயதிற்குட்பட்ட குழந்தை இருக்கும் ஒரு வீட்டில் செலவழிக்கப்படும் டயப்பர்கள் அந்த வீட்டுக் கழிவுகளில் 40% ஆகும்.

  • Share this:
பாரிஸில் உள்ள நிறுவனம் ஒன்று குழந்தைகள் டயப்பர்களைக் கொண்டு பயனுள்ள உரத்தை தயாரித்து அசத்தியுள்ளது. ஒவ்வொரு வருடமும் குழந்தைகளில் பயன்படுத்தப்படும் டயப்பர் கழிவுகள் மட்டும் கணிசமான அதிகரிப்பை குறிக்கின்றன. இதனை ஏன் மறுசுழற்சி செய்யக்கூடாது என பாரிஸில் உள்ள ஒரு நிறுவனம் யோசித்து அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. பாரிஸ் பிராந்தியத்தில் உள்ள Les Alchimistes என்ற நிறுவனம், நான்கு தினப்பராமரிப்பு நிலையங்களிலிருந்து பயன்படுத்தப்பட்ட டயப்பர்களை பெற்று மறுசுழற்சி செய்கிறது.

இதுவரை பயன்படுத்தப்படாத உயிர் கழிவுகளிலிருந்து தரமான உரத்தை இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும், மக்கள் சுமார் 3.5 பில்லியன் டயப்பர்களை வாங்கி எறிந்து விடுகிறார்கள். இந்த கழிவுகளை ஸ்டார்ட் அப் நிறுவனமான லெஸ் அல்கிமிஸ்டெஸ் மறுசுழற்சி செய்து, உரம் தயாரிக்க டயப்பர் அடுக்குகளில் இருந்து கரிமப் பொருளை மீட்டெடுக்கிறது.

மதிப்பிடப்படாத கழிவுகள்

பயன்படுத்தப்பட்ட டயப்பர்கள் பெரிய கழிவு நீரோடைகளுக்கு சமமாக பார்க்கப்படுகின்றன. அவை பெரும்பாலும் எரிக்கப்படுகின்றன. பாரிஸ் போன்ற நாடுகளில் குழந்தைகள் தங்களது முதல் இரண்டு வயது வரை, ஒரு நாளைக்கு சராசரியாக 2 முதல் 8 டயப்பர்களை போட்டுக்கொள்கின்றனர். எனவே இந்த கழிவுகள் மட்டும் ஒரு டன்னுக்கு மேல் குவிகிறது. 2 வயதிற்குட்பட்ட குழந்தை இருக்கும் ஒரு வீட்டில் செலவழிக்கப்படும் டயப்பர்கள் அந்த வீட்டுக் கழிவுகளில் 40% ஆகும். இந்த நிலையில் ஸ்டார்ட்-அப் நிறுவனமான லெஸ் அல்கிமிஸ்டஸ் இந்த கழிவுகளை ஒரு ஆற்றலாக பார்த்தது. இதற்காக நிறுவனத்தின் உயிர் கழிவு வல்லுநர்கள் ஒரு இயந்திர செயல்முறையை வடிவமைத்துள்ளனர். இது கரிமப் பொருள்களை உபயோகிக்கப்பட்ட டயப்பர்களில் இருந்து  மீட்டெடுத்து அதை உரமாக மாற்றும். மேலும் இதற்கு "கவுச்சஸ் ஃபெர்டைல்ஸ்" (Couches Fertiles) ப்ராஜெக்ட் என பெயரிட்டுள்ளனர்.


மேலும் சீன்-செயிண்ட்-டெனிஸில் (93) எனும் ஒரு பிரத்யேக இயந்திரம் கரிம கூழிலிருந்து பிளாஸ்டிக்கைப் பிரிக்கிறது. மேலும் இந்த கரிமப்பொருள் மர தூள் மற்றும் காபி கழிவுகள் ஆகியவற்றுடன் சேர்க்கிறது. இதன் மூலம் தரமான உரம் உபயோகித்த டயப்பர்களில் இருந்து பெறப்படுகிறது.

5 பாரிசியன் நர்சரிகளுடன் இணைந்து 2019 முதல் டயப்பர்களின் உரம் சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக 4 டன் கழிவுகள் எரிக்கப்படுவதை நிறுவனம் தவிர்த்துள்ளது. லெஸ் அல்கிமிஸ்டெஸ் நிறுவனத்தை பொறுத்தவரை, டயப்பர் அடுக்கு முதல் உரம் வரை ஒரு நல்ல சுற்று ஒன்றை உருவாக்குவதும், மற்றும் தொழில்துறை கூட்டாளர்களுடன் இணைந்து 100% உரம் தயாரிக்கும் டயப்பரை உருவாக்குவதும் நீண்டகால நோக்கமாக கொண்டுள்ளது.
Published by:Tamilmalar Natarajan
First published: