ஹோம் /நியூஸ் /உலகம் /

ஹிஜாப் அணியாத பெண் வீராங்கனை.. வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய ஈரான்.. பகீர் சம்பவம்!

ஹிஜாப் அணியாத பெண் வீராங்கனை.. வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய ஈரான்.. பகீர் சம்பவம்!

ஈரான் பெண் வீரர் வீட்டை இடித்த அரசு

ஈரான் பெண் வீரர் வீட்டை இடித்த அரசு

விளையாட்டு போட்டியில் ஹிஜாப் இல்லாமல் பங்கேற்ற ஈரான் நாட்டைச் சேர்ந்த சர்வதேச வீராங்கனையின் வீட்டை அந்நாட்டு அரசு இடித்து தரைமட்டமாக்கியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, IndiaTehranTehran

இஸ்லாமிய நாடான ஈரானில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுகிறது. அங்கு 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற சட்ட விதிமுறைகள் பின்பற்றவது கண்காணிப்பதற்கு என்று கலாசார காவல்படை (Morality Police) என்ற தனி காவல்பிரிவு உருவாக்கப்பட்டிருந்தது. இந்த காவல்படை பிரிவு, விதிமுறைகளை மீறும் நபர்களிடம் பார்த்த இடத்திலேயே கடும் தண்டனை வழங்கி அச்சுறுத்தலை அளித்து வந்தது.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி ஹிஜாப் அணியாமல் காரில் பயணம் செய்த 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் இந்த கலாசார காவல்துறையினரின் தாக்குதலில் உயிரிழந்தார். ஈரானில் இந்த சட்டத்திற்கு எதிராக பெண்கள், கல்லூரி மாணவர்கள், மனித உரிமையாளர்கள உள்ளிட்டோர் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு அந்நாட்டின் பல முன்னணி பிரபலங்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் அந்நாட்டைச் சேர்ந்த சர்வதேச வீராங்கனையான எல்னாஸ் ரெகாபி தென்கொரியாவில் நடைபெற்ற சர்வதேச தடையேறுதல் போட்டியில் பங்கேற்றிருந்தார். இவர் இந்த போட்டியில் அரசின் விதிகளை பின்பற்றாமல் ஹிஜாபை கழற்றி, தனது தலைமுடியை போனிடெயிலாக போட்டுக்கொண்டு போட்டியில் பங்கேற்றார். இவரின் இந்த செயலுக்கு ஹிஜாப் போராட்டக்கரார்களிடையே பெரும் ஆதரவு கிடைத்தது. பலரும் எல்னாஸை ஹீரோ என்று பாராட்டினர்.

இதையும் படிங்க: 'இது கடவுள் ஆர்டர்'.. நடு வானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற பெண்.. பகீர் சம்பவம்!

ஆனால், இவர் மீது அரசு குறிவைத்து கடும் நடவடிக்கை எடுக்கும் என்ற அச்சமும் நிலவியது. போட்டி முடிந்து ஈரான் திரும்பிய எல்னாசும், தனது செயல் தற்செயலானது, உள்நோக்கம் இல்லை என்று கருத்து தெரிவித்தார். அரசின் அழுத்தத்திற்கு பயந்து இந்த கருத்தை அவர் தெரிவித்தார் என பலரும் விமர்சனம் செய்தனர். இந்நிலையில், பலரும் பயந்தது போலவே எல்னாஸ் மீது ஈரான் அரசு மோசமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

எல்னாஸ் வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய அந்நாட்டு அரசு, அவரது பதக்கங்களை சாலைகளில் தூக்கி வீசியுள்ளது. இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஈரானில் மக்கள் போராட்டத்திற்கு பணிந்து கலாச்சார காவல்பிரிவு கலைக்கப்பட்டதாக செய்தி வெளியான சூழலில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவமானது அரசு மீதான அச்சத்தை அந்நாட்டு மக்களிடம் மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

First published:

Tags: Hijab, Iran