Home /News /international /

எலிகளின் மூளையில், தனிமையை உணர்ந்து துணை தேட வைக்கும் ஹார்மோன் கண்டுபிடிப்பு!

எலிகளின் மூளையில், தனிமையை உணர்ந்து துணை தேட வைக்கும் ஹார்மோன் கண்டுபிடிப்பு!

எலிகளின் மூளையில், தனிமை

எலிகளின் மூளையில், தனிமை

மூளையில் உள்ள ஹார்மோன் தனிமைப்படுத்தப்படுவதை உணர்கிறது மற்றும் துணையைத் தேடுகிறது, ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது

மனிதன், ஒரு சமூக விலங்கு. ஏனெனில் சமூகமாக இருப்பது, பிற உயிரினங்களுடன் தொடர்புகொள்வது போன்றவைகள் மனிதனுக்குள் வேரூன்றி போன குணங்கள் ஆகும். எனவே தான் மனிதர்கள், சோஷியல் அனிமல்ஸ் (social animals) என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

இருப்பினும், இப்படியாக சமூகத்தோடு ஒன்றி வாழும் இனங்களின் நரம்பியல் அடிப்படை (neural basis) சமூகத்திற்கு முரணான சூழ்நிலையில் இருக்கும் பொழுது எப்படி இருக்கும் என்பது இன்னும் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், தனிமைப்படுத்தப்படும் பொழுது எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லை.

தனிமைப்படுத்தப்படுவது என்பது ஒரு நிகழ்வாக இல்லாமல், உயிர் காக்கும் ஒரு அவசியமாக மாறிவிட்ட இந்த ​​தொற்றுநோய் காலத்தில், தனிமை என்கிற நேர்மாறான சூழ்நிலை மிகவும் பரவலாகி விட்டது.

சென்டர் ஆஃப் ப்ரெயின் சைன்ஸின் (Centre for Brain Science - CBS) ஆர்ஐகேஇஎன் (RIKEN) ஆராய்ச்சியாளர்கள் குழு, தனிமைப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளில் மூளையின் பயோலாஜிக்கல் ரெஸ்பான்ஸைக் (biological response) கண்டறிந்துள்ளனர். பெண் எலிகளை வைத்து ஆய்வை நடத்திய இந்த குழு, சோஷியல் ஐசோலேஷனின் மாலிக்குலர் இன்டிகேட்டர் மற்றும் ரெகுலேட்டரை (molecular indicator and regulator) கண்டறிந்ததுள்ளது.

இதையும் படியுங்கள் : தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா, மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த சீன அரசு

அதாவது மற்ற எலிகளுடன் தொடர்புகொள்வதற்கான தூண்டுதலை ஏற்படுத்தும், பெப்டைட் அமிலின் (peptide amylin) என்ற ஹார்மோனால் அவைகள் உந்தப்படுவதை ஆரய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர், இந்த ஹார்மோன், மெடிக்கல் ப்ரீஆப்டிக் ஏரியாவில் (Medial Preoptic Area - MPOA) காணப்படுகிறது. தனிமைப்படுத்தலின் நிலைகள் மாறும் போது, முன்மூளையில் அமைந்துள்ள பெப்டைட் அமிலின் அளவு மாறுபடுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

நேச்சர் கம்யூனிகேஷன்ஸில் (Nature Communications) வெளியிடப்பட்ட ஆய்வின்படி, எலிகள் ஆறு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட பிறகு அமிலின் முற்றிலும் மறைந்து விட்டதாகவும், இரண்டு வாரங்களுக்குப்
பிறகு அதே எலிகளை அவற்றின் கூண்டு-தோழர்களுடன் மீண்டும் இணைந்த பிறகு அது இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

இதையும் படியுங்கள் : அமெரிக்காவில் ஒமிக்ரான் வேரியன்ட்டால் பாதிக்கப்பட்ட மான் - நிபுணர்கள் கவலை!

மேலும், ஒரே கூண்டில் இரண்டு பகுதிகளாக எலிகளை பிரிக்கும்போது அமிலின் அளவு ஏற்ற இறக்கமாக இருந்துள்ளது என்பதையும், இப்படியாக சக கூட்டாளியை மற்ற எலிகள் தேடுவதற்கு அமிலின் தான் பொறுப்பு என்பதையும் இந்த குழு கண்டறிந்துள்ளது.

குறிப்பிட்ட ஆய்வின் முதன்மை ஆசிரியரான குமி குரோடா, "தனிமைப்படுத்தல் மற்றும் மீண்டும் இணைவதற்கு அமிலின் தான் மிகவும் முக்கியமான 'ரெஸ்பான்ஸ்' ஆக இருக்கிறது மற்றும் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் நடத்தைகளையும் எளிதாக்குகிறது. எங்களின் அனைத்து முடிவுகளின் வழியாகவும், சோஷியல் காண்டாக்ட்களை உணரவும், பார்க்கவும், மூளையில் உள்ள அமிலின் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நாங்கள் நம்புகிறோம்” என்று ஏஎன்ஐ-யிடம் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள் : தனிமையில் இறந்த மூதாட்டி - இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உடல் கண்டுபிடிப்பு!

மேலும் குமி குரோடா, கடந்த 2021 ஆம் ஆண்டில் இவரும், இவரது குழுவும் நடத்திய மற்றொரு ஆய்வுடன், இந்த சமீபத்திய ஆய்வை தொடர்புபடுத்தி பார்க்கிறார். முன்னதாக நடந்த ஆராய்ச்சியில், முன் மூளையின் எம்பிஓஏ (MPOA) தான் மெட்டர்னல் கேருக்கான (maternal care) பகுதி என்பதையும், மெட்டர்னல் மோட்டிவேஷன் (maternal motivation) சென்ட்ரல் எம்பிஓஏ-வில் (central MPOA) உள்ள அமிலின்-சென்சிட்டிவ் நியூரான்களால் இயக்கப்படுகிறது என்பதையும் குமி குரோடா கண்டறிந்தார்.

இந்த இணைப்பு, 18 வயது நிரம்பியவர்களுக்கான சமூக உள்ளுணர்வானது பெற்றோரின் கவனிப்பில் இருந்து தான் உருவாகிறது என்கிற அனுமானத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Loneliness, Study finds

அடுத்த செய்தி