Home /News /international /

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவருக்கு மீண்டும் தொற்று - மருத்துவ உலகம் சொல்வது என்ன? அறிவுரைகள் என்ன?

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவருக்கு மீண்டும் தொற்று - மருத்துவ உலகம் சொல்வது என்ன? அறிவுரைகள் என்ன?

கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை

குறைந்தது மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை எதிர்ப்பு சக்தி உடம்பில் இருக்கும் என நம்பப்பட்டது. அதன் பிறகு எதிர்ப்பு சக்தி மெல்ல மெல்ல குறையலாம் என்று கூறப்பட்டது.

உலகிலேயே முதல் முறையாக ஒரு நபருக்கு இரண்டு முறை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவிலிருந்து மீண்ட 30 வயது ஆணுக்கு நான்கு மாதங்கள் பிறகு மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ள ஹாங்காங் பல்கலைகழகம். அவரது உடம்பில் தொற்று ஏற்படுத்திய வைரஸின் மரபணுவை ஆய்வு செய்துள்ளது. அதில் முதல் முறை தொற்று ஏற்படுத்திய வைரஸ் மற்றும் இரண்டாவது முறை தொற்று ஏற்படுத்திய வைரஸில் காணப்படும் மரபணுக்களில் மாற்றங்கள் உள்ளதாக ஹாங்காங் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

இது வரை கொரோனாவிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருக்கும் என்று நம்பப்பட்டது. எத்தனை காலம் என்று அறுதியிட்டு எந்த நாடும் இதுவரை கூறவில்லை என்றாலும் குறைந்தது மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை எதிர்ப்பு சக்தி உடம்பில் இருக்கும் என நம்பப்பட்டது. அதன் பிறகு எதிர்ப்பு சக்தி மெல்ல மெல்ல குறையலாம் என்று கூறப்பட்டது.

மேலும் படிக்க: கொரோனா வைரஸ் தொற்றுக்கு, 2 ஆண்டுகளில் முடிவு வரும் - உலக சுகாதார அமைப்பு

சென்னையில் ஒரு சில நபர்களுக்கு இரண்டாவது முறை தொற்று ஏற்பட்டதாக மாநகராட்சி ஆணையர் சில வாரங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். பி சி ஆர் பரிசோதனையில், வைரஸின் இறந்த செல்கள் உடலில் இருந்தாலும் , பாசிட்டிவ் காட்டும் என்பதால் இதுவரை, இரண்டாவது முறை தொற்று ஏற்பட்டதற்கான அறிவியல் பூர்வமான சான்று எங்கும் இல்லை.



ஆனால் தற்போது கிடைத்துள்ள ஆதாரத்தின் படி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதன் மூலம்  இயற்கைதான எதிர்ப்பு சக்தி கிடைத்தாலும் மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை தெரிவிக்கிறது.

எனவே ஒரு முறை தொற்று வந்தவர்கள் கூட, தடுப்பு மருந்து உருவான பின்னர் அதை போட்டுக் கொள்ள வேண்டும், மற்றும் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி போன்ற நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Published by:Gunavathy
First published:

Tags: CoronaVirus, Hong Kong, Make Your Own Mask, Vaccination Injection

அடுத்த செய்தி