Home /News /international /

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை

கடந்த 6 வாரங்களில் மட்டும் 24 விமான மார்க்கங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது. சமீபத்தில் தென்கொரியாவில் இருந்து ஹாங்காங்கிற்கு வந்த 3 விமான பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    கொரோனா பரவல் காரணமாக இந்தியா உள்பட 8 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது.

    உலகம் முழுவதும் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக, எதிர்பாராத அளவில் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் கடும் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தும் நிலைக்கு பல்வேறு நாடுகள் தள்ளப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வார இறுதியில் முழு பொதுமுடக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்து மூலமாக ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு கொரோனா எளிதாக பரவுவதால், சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு தடை விதிக்க சில நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

    இந்த நிலையில் இந்தியா உள்பட 8 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-

    ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளன. இதனை கவனத்தில் கொண்டு இந்த 8 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, இந்த 8 நாடுகளில் தங்கியிருக்கும் தனி நபர்களும் ஹாங்காங் விமானத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கொரோனா பரவலை தடுக்க ஹாங்காங் அரசு மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த 6 வாரங்களில் மட்டும் 24 விமான மார்க்கங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது. சமீபத்தில் தென்கொரியாவில் இருந்து ஹாங்காங்கிற்கு வந்த 3 விமான பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    ஹாங்காங்கை சேர்ந்த மருத்துவ வல்லுனரான யுவான் குவோக் யங், ஹாங்காங் கொரோனா பாதிப்பின் 5 வது அலையை எதிர்கொண்டு வருவதாக கூறியுள்ளார். நேற்றைய நிலவரப்படி அங்கு ஒரே 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Hong Kong

    அடுத்த செய்தி