ஹாங்காங் போராட்டம் போல் நமக்கும் நடக்கலாம் - சிங்கப்பூரை எச்சரிக்கும் அமைச்சர்!

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் மக்கள் செயல் கட்சி தொடர்ந்து ஆட்சி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஹாங்காங் போராட்டம் போல் நமக்கும் நடக்கலாம் - சிங்கப்பூரை எச்சரிக்கும் அமைச்சர்!
சிங்கப்பூர் அமைச்சர்
  • News18
  • Last Updated: November 19, 2019, 2:12 PM IST
  • Share this:
சிங்கப்பூர் அரசு மெத்தனமாக இருந்தால் ஹாங்காங் நாட்டின் போராட்டம் போல் நம் ஊரிலும் நடக்கும் வாய்ப்பு அதிகம் என எச்சரித்துள்ளார் சிங்கப்பூர் அமைச்சர் சான் சுன் சிங்.

ஹாங்காங் நாட்டுப் போராட்டத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “ஒரு நல்ல அரசு மக்களின் நலனை முன்வைக்க வேண்டும்.

இல்லையென்றால் ஹாங்காங் நாட்டில் வெடித்தது போன்ற மக்கள் போராட்டம் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். மெத்தனப்போக்குடன் இல்லாமல் மக்களுக்கானத் தேவையை நிறைவேற்றுதல் அவசியம்” எனக் குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூரில் ஏப்ரல் 2021-ல் நடக்கும் பொதுத்தேர்தல் முன்னதாகவே நடக்க உள்ள நிலையில் அமைச்சரின் இந்த பேச்சு சிங்கப்பூரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் மக்கள் செயல் கட்சி தொடர்ந்து ஆட்சி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: வலுப்பெற்ற ஹாங்காங் போராட்டம்...கட்டுப்படுத்த முதன்முறையாக வந்திறங்கிய சீன ராணுவம்..!
First published: November 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்