போராட்டக் களமான சீனாவின் 70-வது ஆண்டு கொண்டாட்டம்! தாக்கப்பட்ட ஹாங்காங் மக்கள்

கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் காவலர்கள் போராட்டக்காரர்களை விரட்ட முயன்றனர். 

போராட்டக் களமான சீனாவின் 70-வது ஆண்டு கொண்டாட்டம்! தாக்கப்பட்ட ஹாங்காங் மக்கள்
ஹாங்காங் போராட்டம்
  • News18
  • Last Updated: October 2, 2019, 8:33 PM IST
  • Share this:
சீனாவில் 70-வது ஆண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்த நேரத்தில், ஹாங்காங்கில், பெரும் போராட்டம் வெடித்து வன்முறையாக மாறியது.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பகுதியான ஹாங்காங்கில் முழுமையான ஜனநாயகத்தைக் கொண்டு வரக் கோரி கடந்த 4 மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சீனா குடியரசின் 70-வது தினத்தை ஒட்டி ஏராளமானோர் வீதிகளில் திரண்டு சீன அதிபருக்கு எதிராக முழக்கமிட்டபடி கையில் குடையுடனும், முகமூடி அணிந்தும் சென்றனர். மரணத்தின் பணம் என்றழைக்கப்படும், போலி நோட்டுகளும் பேரணியில் விநியோகிக்கப்பட்டன.

அமைதியாக சென்றுக்கொண்டிருந்த பேரணியில், போராட்டக்காரர் மீது காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இந்த தகவல் காட்டுத் தீ போல பரவி பேரணி போராட்டமாக மாறியது. பேரணியில் சென்றவர்கள் பாதுகாப்புப் படையினரை தாக்கியதால் மோதல் மூண்டது. கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் காவலர்கள் போராட்டக்காரர்களை விரட்ட முயன்றனர். ஆனால் பாதுகாப்பு படையினர் மீது குடைகளை வைத்து போராட்டக்காரர்கள் தாக்கினர்.


காவலர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கு இடையே மூண்ட மோதலில் 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹாங்காங் பாதுகாப்பு படையினர், நான்கு மாதங்களில் துப்பாக்கியால் சூடுவதும் இதுவே முதல் முறையாகும். சீனாவின் 70-வது ஆண்டு கொண்டாட்டத்தை துக்க நாளாக ஹாங்காங் மக்கள் கடைபிடித்தனர்.

Also see:

First published: October 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்