மீண்டும் வன்முறை நோக்கித் திரும்பிய ஹாங்காங் போராட்டம்..!

ஹாங்காங் மரணத்தின் பாதையில் பயணிப்பதாகவும் இது புரட்சிக்கான நேரம் என்றும் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

மீண்டும் வன்முறை நோக்கித் திரும்பிய ஹாங்காங் போராட்டம்..!
ஹாங்காங் போராட்டம். (Reuters)
  • News18
  • Last Updated: July 22, 2019, 10:45 AM IST
  • Share this:
ஹாங்காங் நகரில் ஒப்படைப்புச் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையானதால் காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசிக் கூட்டத்தைக் களைத்தனர்.

ஹாங்காங் நகரில் கைதாகும் குற்றம் சாட்டப்பட்டோர் அல்லது குற்றவாளிகளைச் சீனாவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் ஒப்படைப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹாங்காங் நகர மக்கள் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கடந்த ஜூன் மாதம் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் அந்த மசோதா நிறைவேற்றப்படாது என ஹாங்காங் தலைமையால் உறுதியளிக்கப்பட்டது. ஆனாலும், போராட்டங்களும் வன்முறைச் சம்பவங்களும் தொடர்ந்து வந்தன. ஹாங்காங் தலைவர் கேரிலாம்-க்குக் கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.


போராட்ட ஊர்வலத்தில் கலவரக்காரர்கள் புகுந்து காவல்துறைக்கு எதிராக வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீச நிலைமை பதற்றமடைந்தது.

ஹாங்காங் மரணத்தின் பாதையில் பயணிப்பதாகவும் இது புரட்சிக்கான நேரம் என்றும் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

மேலும் பார்க்க: சீனாவுக்கு எதிராக லட்சக்கணக்கில் மக்கள் போராட்டம் - அதிர்ந்த ஹாங்காங்!
First published: July 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்