ஹாங்காங்கில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழலில் அரசுக்கு எதிரான போராட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது.
ஹாங்காங்கில் நான்கு பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டிருக்கும் சூழலில், வணிக வளாகம் ஒன்றில் 300-க்கும் மேற்பட்டோர் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனநாயகத்திற்கு ஆதரவாகப் போராடியதால் கடந்த வாரம் போலீசாரால் கைது செய்யப்பட்ட 15 பேரை விடுவிக்கக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டோர் பெரும்பாலும் முக கவசம் அணிந்திருந்தனர்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.