ஹாங்காங் தலைமையின் மெத்தனத்தால் வலிமை பெறும் போராட்டங்கள்..!

சீன தலையீடுக்கு எதிரான மக்களின் மனப்பான்மையை ஹாங்காங் தலைமை மதிக்கவே இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

ஹாங்காங் தலைமையின் மெத்தனத்தால் வலிமை பெறும் போராட்டங்கள்..!
ஹாங்காங் தலைவர் கேரி லாம்
  • News18
  • Last Updated: November 26, 2019, 4:41 PM IST
  • Share this:
ஹாங்காங் தலைமைக்கு எதிராக ஜனநாயக சார்பு வேட்பாளர்கள் அந்த நாட்டின் உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

ஆனாலும், ஹாங்காங் தலைமை இன்னும் தனது பிடியிலிருந்து இறங்காமல் இருப்பதால் போராட்டங்கள் மீண்டும் வலுப்பெறும் சூழலில் உள்ளது. கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் போராட்டத்தில் ஹாங்காங் தலைவர் கேரிலாம் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வருவதாகக் கூறினார்.

ஆனால், இதுவரையில் அதற்கான எந்த முன்னெடுப்பையும் அவர் மேற்கொள்ளவில்லை. குற்றாவாளிகள் ஒப்படைப்புச் சட்டம், காவல்துறை ஆதிக்கம் என ஜனநாயக சார்பு ஆய்வாளர்கள் தலைமையின் பல முன்னெடுப்புகளை எதிர்த்து வருகின்றனர்.


ஹாங்காங் அரசு மக்களின் நம்பிக்கையைப் பெற எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதே போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் முதன்மையான குற்றச்சாட்டாக உள்ளது. சீன தலையீடுக்கு எதிரான மக்களின் மனப்பான்மையை ஹாங்காங் தலைமை மதிக்கவே இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

மேலும் பார்க்க: 'இந்தியாவுக்கு எதிராக இலங்கை ஒருநாளும் செயல்படாது’- அதிபர் கோத்தபய ராஜபக்ச!
First published: November 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்