ஹாங்காங் போராட்டம்- பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்ட தலைவர்!

அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கிய அரசு தலைமையகங்கள் ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடி தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர்.

Web Desk | news18
Updated: June 17, 2019, 5:37 PM IST
ஹாங்காங் போராட்டம்- பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்ட தலைவர்!
கேரி லாம். (Image: Reuters)
Web Desk | news18
Updated: June 17, 2019, 5:37 PM IST
ஹாங்காங் நாட்டின் ஒப்படைப்புச் சட்டத்திருத்த மசோதாவுக்கு மக்கள் தெரிவித்த எதிர்ப்பால் அந்தப் பிரதேசத்தின் தலைவர் கேரி லாம் மன்னிப்புக் கோட்டுள்ளார்.

ஹாங்காங் நகரில் கைதாகும் குற்றம் சாட்டப்பட்டோர் அல்லது குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் ஒப்படைப்புச் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஹாங்காங் நகர மக்கள் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கடந்த ஜூன் 10-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹாங்காங் நகர வீதிகளில் சுமார் 7 மணி நேரம் ஊர்வலப் போராட்டம் நடந்தது. அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கிய அரசு தலைமையகங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடி தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். இதையடுத்து ஹாங்காங் தலைவர் கேரி லாம் பதவிவிலக வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்தனர்.

தற்போது தலைவர் கேரி லாம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹாங்காங் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இந்த விவகாரத்தில் மிகவும் நேர்மையாகவும் தாழ்மையுடனும் அனைத்து விமர்சனங்களையும் ஏற்றுக்கொண்டு மக்களுக்கான சேவையை மேம்படுத்த விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பார்க்க: ஃப்ளிப்கார்ட் மொபைல் சேல்... Zenfone முதல் iPhone வரையில் சூப்பர் தள்ளுபடி!
First published: June 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...