Home /News /international /

Covid-19 : ஹாங்காங்கில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு: சவக்கிடங்குகளும் அதிகரிப்பு

Covid-19 : ஹாங்காங்கில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு: சவக்கிடங்குகளும் அதிகரிப்பு

ஹாங்காங்கில் ஓயாத கொரோனா

ஹாங்காங்கில் ஓயாத கொரோனா

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையின் வேகத்துக்கு ஏற்ப ஹாங்காங்கில் உள்ள மருத்துவமனைகள் தங்களது பொது சவகிடங்குகளில் இறந்த உடல்களை கொண்டு வைப்பதற்கான செயல்பாடுகளில் திணறி வருகின்றன, என்னதான் அதிகாரிகள் கோவிட் 19 பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்துகிறோம் என்று கூறினாலும் மருத்துவமனை மற்றும் பொதுச் சவகிடங்குகளில் உடலை வைத்துப் பரமாரிப்பதற்கான பணிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்கவும் ...
    அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையின் வேகத்துக்கு ஏற்ப ஹாங்காங்கில் உள்ள மருத்துவமனைகள் தங்களது பொது சவகிடங்குகளில் இறந்த உடல்களை கொண்டு வைப்பதற்கான செயல்பாடுகளில் திணறி வருகின்றன, என்னதான் அதிகாரிகள் கோவிட் 19 பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்துகிறோம் என்று கூறினாலும் மருத்துவமனை மற்றும் பொதுச் சவகிடங்குகளில் உடலை வைத்துப் பரமாரிப்பதற்கான பணிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

    சவக்கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல, மருத்துவமனை விபத்து மற்றும் அவசரப்பிரிவு அறைகளில் அதிக உடல்கள் காத்திருக்கின்றன என்று நகரின் பொது மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டோனி லிங் ராய்ட்டர்ஸ் செய்தி ஏஜென்சியிடம் கூறினார். 2020 ஆம் ஆண்டில் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஹாங்காங்கில் 600 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொடர்புடைய இறப்புகள் நிகழ்ந்துள்ளன, இது மற்ற பெரிய நகரங்களை விட குறைவாக உள்ளது.

    இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை 83 இறப்புகளுடன் தினசரி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் சுமார் 300 இறப்புகள் பதிவாகியுள்ளன, பெரும்பாலானோர் தடுப்பூசி போடப்படாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபமாக தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பினும் பக்க விளைவுகளுக்கான பயம் கொண்டு பெரிய அளவில் இன்னும் வயதானவர்கள் பலர் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை.

    7.4 மில்லியன் மக்கள் வசிக்கும் ஹாங்காங் நகரத்தில் மே மாதத்தின் நடுப்பகுதியில் வைரஸால் இறப்போர் எண்ணிக்கை 3,206 ஆக உயரக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். 2020 அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, ஹாங்காங்கில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 4,000 பேர் இறக்கின்றனர். நகரத்தில் மொத்தம் 171,000 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 160,000 பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து மிகவும் பரவக்கூடிய ஓமைக்ரான் வைரஸின் காரணமாக உள்ளது. ஹாங்காங்கில் கோவிட்டைத் தடுக்க சீனாவும் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

    சீனாவில் 2019ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்பு உலக நாடுகளில் பரவி தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசுகளும் தப்பவில்லை. அந்நாடுகளில் தினசரி லட்சம் எண்ணிக்கையில் பாதிப்பு உறுதியாகி வருகிறது. இந்நிலையில், டெல்டா, டெல்டா பிளஸ் மற்றும் ஒமைக்ரான் என பல்வேறு உருமாறிய வைரஸ்களும் பாதிப்புகளை அதிகரித்து வருகின்றன.

    தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 43.57 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 43,57,91,336 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 36,61,56,426 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 59 லட்சத்து 67 ஆயிரத்து 748 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனா தொற்றுக்கு தற்போது 6,36,67,162 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 75,613 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Corona, Corona death, Hong Kong, Omicron

    அடுத்த செய்தி