ஹாங்காங் அரசு கீழிறங்கி வந்தாலும் மக்கள் போராட்டம் ஓய்ந்தபாடில்லை..!

காவல்துறையினர் காட்டிய வன்முறை நிறைந்த அடக்குமுறைதான் மக்கள் தொடர்ந்து போராட்டக் களத்தில் ஆக்ரோஷத்துடன் போராடி வருவதாக அம்மக்கள் குழுக்கள் தெரிவித்துள்ளனர்.

ஹாங்காங் அரசு கீழிறங்கி வந்தாலும் மக்கள் போராட்டம் ஓய்ந்தபாடில்லை..!
ஹாங்காங் போராட்டம். (Reuters)
  • News18
  • Last Updated: October 23, 2019, 9:07 PM IST
  • Share this:
ஹாங்காங் நாட்டில் பிரச்னைக்குரிய ஒப்படைப்பு சட்ட திருத்த மசோதா திரும்பப் பெறப்பட்டாலும் மக்கள் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

ஹாங்காங் நகரில் கைதாகும் குற்றம் சாட்டப்பட்டோர் அல்லது குற்றவாளிகளைச் சீனாவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் ஒப்படைப்புச் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஹாங்காங் நகர மக்கள் கடந்த சில மாதங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் போராட்டத்தால் இந்த மசோதா திரும்பப்பெறப்பட்டது. இதுகுறித்து ஹாங்காங் தலைவர் கேரி லாம் பல முறை அறிவித்தபோதும், அவருக்கு எதிரான போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை. போராட்டக் காலத்தின் போது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு தலைவர் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது.


அரசு செய்ய வேண்டியன பல உள்ளன. அனைத்துக்கும் தலைவர் கேரி லாம் பதில் சொல்ல வேண்டும் என்று போராட்டக்காரர்கள் தொடர்ந்து எதிர்க்குரல் எழுப்பி வருகின்றனர். காவல்துறையினர் காட்டிய வன்முறை நிறைந்த அடக்குமுறைதான் மக்கள் தொடர்ந்து போராட்டக் களத்தில் ஆக்ரோஷத்துடன் போராடி வருவதாக அம்மக்கள் குழுக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க: 39 பிணங்களுடன் எஸ்டேட்டில் மர்ம லாரி... மனித கடத்தலா? போலீஸ் விசாரணை

10 பைசாவுக்கு டி சர்ட்.. அலைமோதிய கூட்டம்..
First published: October 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்