ஹோம் /நியூஸ் /உலகம் /

வெளிநாட்டுக்குச் சுற்றுலா செல்ல ஆசையா? அதிரடி சலுகையாக 5 லட்சம் இலவச விமான டிக்கெட்!

வெளிநாட்டுக்குச் சுற்றுலா செல்ல ஆசையா? அதிரடி சலுகையாக 5 லட்சம் இலவச விமான டிக்கெட்!

ஹாங்காங்

ஹாங்காங்

இந்த வருடச் சுற்றுலாவிற்கு ஹாங்காங் செல்ல வாய்ப்பு இலவசமாக விமான டிக்கெட் வழங்குகிறது ஹாங்காங் ஏர்லைன்ஸ்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • international, IndiaHong KongHong KongHong KongHong Kong

  வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வண்ணம் ஹாங்காங் ஏர்லைன்ஸ் அதிரடியாக 5,00,000 விமான டிக்கெட்டை இலவசமாக அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

  கொரோனா கலத்திற்கு முன்பு முக்கிய சுற்றுலாத் தலமாக இருந்த ஹாங்காங், கடந்த இரண்டு வருட காலமாகப் பெரிய அளவிலான சரிவைக் கண்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்ததையடுத்து கட்டுப்பாடுகளை ஹாங்காங் அரசு படிப்படியாகத் தளர்த்தி வருகிறது.

  சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்த நிலையில் அதனில் இருந்து மீண்டு வரச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வண்ணம் அதிரடியாக விமான போக்குவரத்தில் சலுகையை அறிவித்துள்ளனர்.

  ஹாங்காங் ஏர்லைன்ஸ் 5,00,000 விமான பயணச்சீட்டை இலவசமாக வழங்கவுள்ளனர். இது குறித்து வெளியான தகவலில் ஹாங்காங் விமான நிலையம் ஆணையம் விமானச் சேவை நிறுவனங்களுடன் இணைந்து சலுகையைப் பயணிகளுக்கு வழங்கவுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில் பயணிகள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என்ற விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Also Read : கின்னஸ் சாதனை படைத்த உலகின் வயதான நாய் பெப்பில்ஸ் இறப்பு.. வயது என்ன தெரியுமா?

  கடந்த புதன்கிழமை அன்று பிரிட்டிஷ் விமான நிறுவனமான விர்ஜின் அட்லாண்டிக் ஹாங்காங்கில் சேவையை நிறுத்திக் கொள்ளப்போவதாக அறிவித்துள்ளது. மேலும் சீனாவின் ஜீரோ கொரோனா கொள்ளை அடிப்படையில் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து வந்தது.

  தற்போது ஹாங்காங் அரசு பயணிகள் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்திக் கொள்ளுதல், விமான நிலையத்தில் கொரோனா சோதனை நடத்துதல் போன்றவற்றை முழுமையாகத் தளர்த்தியுள்ளனர். இதனால் ஹாங்காங் மீண்டும் சூடுப்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Janvi
  First published:

  Tags: Flight travel, Hong Kong, Tourism