ஜெர்மனியை சேர்ந்த வீடற்ற பெண்ணிற்கு கடுங்குளிரில் பிரசவம் - காவலர்கள் மீட்பு!

ஜெர்மனி

போதிய கல்வி இல்லாத மக்கள் தங்களின் இக்கட்டான நேரங்களில் குறிப்பாக பிரசவ நேரங்களில் எம்மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதைக்கூட அறிந்திடாமல் இருக்கின்றனர். இந்த அறியாமை பல நேரங்களில் அவர்களை சிக்கலில் தள்ளிவிடுவதும் உண்டு.

  • Share this:
உலகில் பணக்கார நாடாக இருந்தாலும் சரி சக்திவாய்ந்த நாடாக இருந்தாலும் சரி, ஏழை மக்களின் நிலை அப்படியேதான் இருந்து வருகிறது. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பலரது வாழ்க்கை வறுமையிலேயே கழிந்து போவதும் உண்டு. சமுதாயத்தின் பல அடுக்குகளில் வாழும் மக்களில் அடிப்படை அம்சங்கள்கூட கிடைக்காத ஏழை மக்களின் நெஞ்சை உருக்கும் பல நிகழ்வுகள் வெளியுலகிற்கு தெரியாமலேயே போவதுண்டு. ஆனால் மீடியாக்களின் வாயிலாக ஒருசில நிகழ்வுகள் மட்டும் தான் வெளி உலகத்திற்கு வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியான சம்பவம் ஒன்று கேட்போரை உண்மையில் துன்பப்பட வைத்துள்ளது.

ஜெர்மனியின் பவேரிய நகரமான நியூரம்பெர்க்கில் வீடற்ற ஒரு தம்பதி கூடாரத்தில் வசிக்கின்றனர். வெள்ளிக்கிழமை (நேற்று) அதிகாலை அந்த வீடற்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. கடும் குளிரை எப்படியோ தாங்கிக்கொண்டு உறைபனியில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் அந்தப்பெண். அதிகாலை 5 மணியளவில் சப்வே ஸ்டேஷனுக்கு அருகில் உறைபனியில் அந்த 20 வயது பெண் கிடந்துள்ளார்.

பெண்ணின் துணை மற்றும் குழந்தையை கண்ட ரோந்து காவலர்கள் தாய் மற்றும் சேயை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கதகதப்பிற்கு தாய் மற்றும் சேய் ஸ்லீப்பிங் பேக்கில் வைக்கப்பட்டிருந்தனர்.

அங்கு உறைபனிக்கும் கீழ் மைனஸ் 15 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவியதால் கூடாரத்தில் தவித்த தாய், குழந்தையை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர் என்று DPA நியூஸ் ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.

போதிய கல்வி இல்லாத மக்கள் தங்களின் இக்கட்டான நேரங்களில் குறிப்பாக பிரசவ நேரங்களில் எம்மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதைக்கூட அறிந்திடாமல் இருக்கின்றனர். இந்த அறியாமை பல நேரங்களில் அவர்களை சிக்கலில் தள்ளிவிடுவதும் உண்டு.
Published by:Arun
First published: