அர்னால்டு ஓட்டிய ஹார்லி டேவிட்சன் ரூ. 3.3 கோடிக்கு ஏலம்!

news18
Updated: July 11, 2018, 4:23 PM IST
அர்னால்டு ஓட்டிய ஹார்லி டேவிட்சன் ரூ. 3.3 கோடிக்கு ஏலம்!
டெர்மினேட்டர் படத்தில் அர்னால்ட்
news18
Updated: July 11, 2018, 4:23 PM IST
ஹார்லி டேவிட்சன் ‘ஃபேட் பாய்’ என்ற மாடல் உலக அளவில் பிரசித்தி பெற்றது.  1990 களில் 'டெர்மினேட்டர்-2  ஜட்ஜ்மெண்ட் டே’ திரைப்படத்தில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்டு ஸ்வாஸ்னேக்கர் இந்த வண்டியை ஓட்டிவரும் காட்சிகள் இடம்பெற்றவுடன் ஃபேட் பாயின் விற்பனை பல மடங்கு அதிகரித்தது.

இந்நிலையில், அந்த திரைப்படத்தில் அர்னால்டு ஓட்டி வந்த வண்டி சமீபத்தில் ஏலத்திற்கு விடப்பட்டது. இந்திய மதிப்பில் ரூபாய் ஒன்றரை கோடியிலிருந்து 2 கோடி வரை ஏலம்போகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட அந்த வண்டி ரூ. 3.3 கோடிக்கு ஏலத்திற்கு எடுக்கப்பட்டது.

வெறும் 1,000 கி.மீ. மட்டுமே ஓடியுள்ள இந்த வண்டி, இன்றும் நல்ல கண்டிஷனில்  உள்ளது. மேலும், உலகையே திரும்பிப் பார்க்க வைத்த டெர்மினேட்டர்-2 திரைப்படத்தில் இடம்பெற்ற பல சாகச காட்சிகளிலில் இந்த வண்டி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அர்னால்டு அந்த படத்தில் அணிந்திருந்த லெதர் ஜேக்கட்டும்  ஏலத்திற்கு விடப்பட்டது.

இப்போது உற்பத்தியாகும் ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய், 1,745 சிசி இன்ஜினுடன் 144 என்.எம். டார்க் சக்தியுடன் வெளிவருவது குறிப்பிடத்தக்கது. ஆறு கியர்களுடன் விற்பனையாகும் ஃபேட்பாய் முழுக்க குரோம் பூசப்பட்ட பாகங்களுடனும், எல்.ஈ.டி ஹெட் லைட்டுடனும் வருகிறது. இதன் விலை ரூ. 18 லட்சமாகும்.
First published: July 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...