மனைவியின் பிறந்தநாளன்று சுறாக்களுக்கு இரையான கணவர்...!

news18
Updated: November 9, 2019, 3:23 PM IST
மனைவியின் பிறந்தநாளன்று சுறாக்களுக்கு இரையான கணவர்...!
கோப்புப்படம்
news18
Updated: November 9, 2019, 3:23 PM IST
மனைவியின் பிறந்த நாளை கொண்டாட ரியூனியன் தீவுக்கு வந்த கணவர், கடலில் நீச்சலடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவரை 4 சுறாக்கள் உணவாக சாப்பிட்டுள்ளது.

இங்கிலாந்தின் எடின்பர்க்கை சேர்ந்த ரிச்சர்ட் மார்ட்டின் டர்னர் என்ற 44 வயது நபர், தன்னுடைய மனைவியின் பிறந்த தினத்தை இந்திய பெருங்கடலில் உள்ள ரீயூனியன் தீவுகளில் கொண்டாட முடிவு செய்து, அங்கு சென்றுள்ளார். அங்கு கடலில் அவர் நீச்சலடித்துக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார்.

இதனை அடுத்து, அவரது மனைவி போலீசில் புகாரளிக்க, அவரை சுறாக்கள் சாப்பிட்டுள்ளது தெரிய வந்தது. போலீசார் உபகரணங்கள் உதவியுடன் 4 சுறாக்களை பிடித்துள்ளனர். அவற்றின் வயிற்றில் சில மனித உடல் பாகங்கள் இருந்துள்ளன.


ரிச்சர்டின் திருமண மோதிரம் இருந்த கைகள் ஒரு சுறாவின் வயிற்றில் இருந்துள்ளது. இதனால், அவரை சுறாக்கள் கொன்று உண்டதை போலீசார் உறுதி செய்தனர். மற்ற சுறாக்களின் வயிற்றில் இருந்த உடல் பாகங்களை டி.என்.ஏ பரிசோதனைக்கு உள்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மனைவியின் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக அந்த தீவிற்கு சென்ற ரிச்சர்ட், சுறாக்களுக்கு இரையானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
First published: November 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...