மரணத்திலும் இணைபிரியா தம்பதி!: 70வது திருமண நாளை கொண்டாடிய கணவன் - மனைவி; கொரோனாவால் அடுத்தடுத்த நிமிடங்களில் உயிரிழந்த சோகம்!

மரணத்திலும் இணைபிரியா தம்பதி!: 70வது திருமண நாளை கொண்டாடிய கணவன் - மனைவி;  கொரோனாவால் அடுத்தடுத்த நிமிடங்களில் உயிரிழந்த சோகம்!

“பரவாயில்ல நாம் இப்போது போகலாம்” (it’s OK to let go now) என மனைவி கணவரிடம் கூறியிருக்கிறார். “நான் உனக்காக காத்திருப்பேன்” என கூறிய சிறிது நேரத்திலேயே மனைவி மரணத்தை தழுவ, அவர் இறந்த சில நிமிடங்களிலேயே கணவர் Dick-ம் காலமானார்.

“பரவாயில்ல நாம் இப்போது போகலாம்” (it’s OK to let go now) என மனைவி கணவரிடம் கூறியிருக்கிறார். “நான் உனக்காக காத்திருப்பேன்” என கூறிய சிறிது நேரத்திலேயே மனைவி மரணத்தை தழுவ, அவர் இறந்த சில நிமிடங்களிலேயே கணவர் Dick-ம் காலமானார்.

  • Share this:
70 ஆண்டுகாலமாக திருமண பந்தத்தில் இணைந்திருந்த தம்பதியர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் கணவன், மனைவி என இருவரும் அடுத்தடுத்த நிமிடங்களில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த Dick(வயது 90) மற்றும் Shirley Meek (வயது 87) ஆகிய தம்பதியர் கடந்த டிசம்பர் 22ம் தேதியன்று தங்களின் 70வது திருமண நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர். எனினும் அவர்களின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை, இருவரும் கடந்த ஜனவரி 8ம் தேதியன்று கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதியான நிலையில் அங்குள்ள ரிவர் சைட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவரும் வெவ்வேறு அறைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இருப்பினும் வயோதிகம் காரணமாக அவர்களின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அத்துடன் அவர்கள் உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்தனர்.

அதனையடுத்து இத்தம்பதியரின் மகன், மகள்கள் மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் அணுகி தங்களின் பெற்றோர் இருவரும் மரண தருவாயில் சந்தித்துக் கொள்ள ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுள்ளனர். அதன்படியே செயல்பட்ட மருத்துவமனை நிர்வாகத்தினர் பெரிய அறை ஒன்றில் இருவரையும் (சிகிச்சை கருவிகளுடன் கூடிய படுக்கை என்பதால்) அருகருகே அழைத்து வந்தனர்.

Dick - Shirley Meek தம்பதி


தாங்கள் இருவரும் மரணமடைந்த பின்னர் John Denver-ன் “When the River Meets the Sea” என்ற பாடலை ஒலிக்க வேண்டும் என Dick தனது ஆசையை வெளிப்படுத்தியிருந்ததால் அந்த பாடலை மெல்லிய ஓசையுடன் ஒலிக்கச் செய்தனர்.

நர்ஸ் ஒருவர் Dick அருகே Shirley Meek-ன் படுக்கையை கொண்டு வந்த போது இருவரும் தங்களின் கரங்களை பற்றிக்கொண்டனர். “பரவாயில்ல நாம் இப்போது போகலாம்” (it’s OK to let go now) என மனைவி கணவரிடம் கூறியிருக்கிறார். “நான் உனக்காக காத்திருப்பேன்” என கூறிய சிறிது நேரத்திலேயே மனைவி மரணத்தை தழுவ, அவர் இறந்த சில நிமிடங்களிலேயே கணவர் Dickம் காலமானார்.

70 ஆண்டுகாலம் திருமண பந்தத்தில் அன்பாக, ஒன்றாக பயணித்த தம்பதியர் மரணத்திலும் ஒன்றாக சேர்ந்து பயணித்தது கலங்கச் செய்வதாக இருந்தது. இது தொடர்பாக அத்தம்பதியரின் மகன் Howell கூறுகையில், “பெற்றோரின் மரணம் எங்கள் இதயங்களை சிதைந்துவிட்டன, இருப்பினும் அவர்கள் இருவரும் ஒன்றாகவே சொர்கத்திற்கு செல்லும் பாக்கியத்தை பெற்றுள்ளனர். எத்தனை பேருக்கு இது கிடைக்கும் என கூறினார்.

70 ஆண்டுகாலம் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து மறைந்த Dick - Shirley Meek தம்பதியருக்கு 5 குழந்தைகளும், 13 பேரக் குழந்தைகளும், 28 கொள்ளுப் பேரன் - பேத்திகளும் உள்ளனர்.
Published by:Arun
First published: