• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • அடிக்கல் நாட்டிய அதிபர், அடித்து எடுத்து வைக்காமல் போன துயரம்... 'வெள்ளை மாளிகை' வரலாறு

அடிக்கல் நாட்டிய அதிபர், அடித்து எடுத்து வைக்காமல் போன துயரம்... 'வெள்ளை மாளிகை' வரலாறு

வெள்ளை மாளிகை

வெள்ளை மாளிகை

அமெரிக்க நாட்டைப் போலவே, மக்கள் மனதில் மிக பிரமாண்டமாய் குடியிருக்கும் ஒரு கட்டடம் வெள்ளை மாளிகை.

  • Share this:
    முழுவதும் வெள்ளை நிறம் பூசப்பட்ட இந்த வெள்ளை மாளிகை, 200 ஆண்டுகளாக உலக அதிகாரத்தின் மொத்த சாட்சியாக விளங்குகிறது. இந்த கட்டடத்தில் தான் அதிபரும், அவரது குடும்பத்தினரும் வசிப்பர். அதிபரின் அலுவலக கட்டடமும் வெள்ளை மாளிகை தான். Presidential palace. executive mansion ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்ட இந்த கட்டடத்திற்கு 1792-ம் ஆண்டு அப்போதைய அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் அடிக்கல் நாட்டிவைத்தார்.

    ஜேம்ஸ் ஆப்மேன் என்பவர் தான் வெள்ளை மாளிகையை கட்டிய கலைஞர் ஆவார். நியோகிளாசிக்கல் கட்டடக்கலை முறையில் ஒரு மணற்கல் மாளிகையை உருவாக்கினார் ஆப்மேன். கட்டட வடிவமைப்பை 8 ஆண்டுகள் மேற்பார்வை செய்த அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன், மாளிகையில் வசிக்கவே இல்லை. கட்டடம் கட்டி முடிக்கப்படுவதற்கு முன்னரே அவர் காலமானார். அதிபராக வெள்ளை மாளிகையில் முதன்முதலில் 1800-ஆம் ஆண்டு காலடி எடுத்து வைத்தவர் ஜான் ஆடம்ஸ்..

    வெள்ளை மாளிகையை கட்டிய கட்டிடக் கலைஞர் ஜேம்ஸ் ஆப்மேன் அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர். இவர் அயர்லாந்து நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டும் போது, வெள்ளை மாளிகையின் தழுவலுடன் தான் கட்டினார். இதனால், அயர்லாந்து பார்லிமென்ட்டான லின்ஸ்டர் ஹவுஸ்-ஐ வெள்ளை மாளிகையின் இரட்டை கட்டடம் எனவும் குறிப்பிடுகிறார்கள்.

    18 புள்ளி 7 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள வெள்ளை மாளிகையில் 132 அறைகள் உள்ளன. இதில் 16 விருந்தினர் அறைகளும் அடங்கும். 35 கழிவறைகளும், 412 கதவுகளும், 28 குளிர்காயும் முகப்புகளும் கொண்டது வெள்ளை மாளிகை. எந்த ஒரு வேலைக்கும் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியே செல்ல வேண்டும் என்ற அவசியம் இருக்காது. பூக்கடையில் இருந்து கார்பென்டர் ஷாப், பல் மருத்துவ அலுவலகம் என வெள்ளை மாளிகையில் சகல வசதிகளும் உள்ளன.

    1812-ல் நடைபெற்ற உலக யுத்தத்தின் போது, பிரிட்டிஷ்காரர்கள் வைத்த தீயில் வெள்ளை மாளிகையின் சுற்றுச்சுவர் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளும் முற்றிலும் சேதமடைந்தன. 1929-ம் ஆண்டு ஒருமுறையும், ஹரி ட்ருமேன் அதிபராக இருந்த போது ஒரு முறையும் தீ விபத்தால் வெள்ளை மாளிகை பெருத்த சேதமடைந்தது. இந்த விபத்துகளுக்குப் பிறகு, வெள்ளை மாளிகை மீண்டும் கட்டப்பட்டது. வெள்ளை மாளிகைக்கு தற்போது பெயிண்ட் அடிக்க வேண்டும் என்றால் 570 கேலன் பெயிண்ட் தேவைப்படும்.

    வெள்ளை மாளிகைக்கு வாரத்திற்கு 30 ஆயிரம் பார்வையாளர்கள் வருகிறார்கள். வெள்ளை மாளிகைக்கு 65 ஆயிரம் கடிதங்கள் வருகிறது. ஏறத்தாழ 3,500 தொலைபேசி அழைப்புகளைப் பெறுகிறார்கள். 10,000 மின்னஞ்சல்கள், 1,000 ஃபேக்ஸ்கள் வருகின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: