76 ஆண்டுகளுக்கு முன் நிகழ்த்தப்பட்ட கொடூரம் - ஹிரோஷிமா குண்டுவெடிப்பின் திக் திக் அனுபவம்!

hiroshima

பயங்கர சத்தம் கேட்டதை அடுத்து அப்போது 14 வயதாகி இருந்த டரிகோஷி வெளியே சென்று பார்த்த போது, எந்த விமானத்தையும் பார்க்கவில்லை. ஆனால் வடகிழக்கில் பார்த்த போது வானத்தில் தெரிந்த ஒரு கருப்புப் புள்ளியை கண்டு ஒரு நொடி திகைத்துள்ளார்.

  • Share this:
சரியாக 76 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1945 ஆகஸ்ட் 6ம் தேதியன்று கற்பனை செய்ய முடியாத ஒரு பேரழிவை உலகம் கண்டது. இரண்டாம் உலகப் போரின் போது கடந்த 1945-ம் ஆண்டு இதே நாளில் காலை 8.15 மணியளவில், வல்லரசான அமெரிக்கா, ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது நடத்திய அணு குண்டு தாக்குதலை இந்த நாள் நமக்கு நினைவூட்டுகிறது. அமெரிக்காவின் தாக்குதலில் ஹிரோஷிமா நகரம் கிட்டத்தட்ட 90% அழிக்கப்பட்டு 80,000-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.

62,000-த்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தரைமட்டமாகின. 35,000த்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் அணுகுண்டின் அழிவுகரமான விளைவுகள் குறித்த எச்சரிக்கை மற்றும் உலக நாடுகளிடையே அமைதி நிலவ வேண்டியதன் அவசியம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி "ஹிரோஷிமா தினம்" அனுசரிக்கப்பட்டு வருகிறது.

Also Read: ரவி தாஹியாவின் ஒலிம்பிக் பதக்கத்தால் திகார் சிறையில் உணர்ச்சிவசப்பட்ட சுஷில் குமார்..

அமெரிக்காவின் இந்த தாக்குதலில் உயிர் பிழைத்தவர்கள் அணுகுண்டு வெடிப்பால் வெளியான ரேடியேஷன் காரணமாக கொடூர நோய்களுக்கு ஆளாகினர். அதன் பிறகு அந்நகரத்தில் பிறந்த ஆயிரக்கணக்கான குழந்தைகள் உடல் குறைபாடுகள் மற்றும் வேதனை அளிக்கும் நோய்களுடன் பிறந்தது உலகை அதிர்ச்சியடைய செய்தது. இப்படிப்பட்ட வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்திய ஹிரோஷிமா அணு குண்டுவெடிப்பு நிகழ்வை நேரில் கண்ட சில சாட்சிகளின் விவரங்கள் மற்றும் குண்டுவெடிப்பில் போது அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் உள்ளிட்டவை குறித்து இங்கே நாம் பார்க்கலாம்.

hiroshima


ஃபுஜியோ டரிகோஷி(Fujio Tarikoshi):

கடந்த 2017-ல் 1945 என்ற ஆவணப்பட ப்ராஜக்டிற்காக தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் 86 வயதாக இருந்த டரிகோ. இவர் தனது தாயுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டு கொண்டிருந்த போது வானில் என்ஜின்களின் ஆழமான சத்தத்தை கேட்டதாக கூறினார். பயங்கர சத்தம் கேட்டதை அடுத்து அப்போது 14 வயதாகி இருந்த டரிகோஷி வெளியே சென்று பார்த்த போது, எந்த விமானத்தையும் பார்க்கவில்லை. ஆனால் வடகிழக்கில் பார்த்த போது வானத்தில் தெரிந்த ஒரு கருப்புப் புள்ளியை கண்டு ஒரு நொடி திகைத்துள்ளார்.

Also Read:  Taliban vs Afghan Forces | ஆப்கன் அரசுப் படைகளை விட தலிபான்கள் எந்த வகையில் பலம் வாய்ந்தவர்கள்?

திடீரென்று அந்த புள்ளி அவரது சுற்றுப்புறத்தை நிரப்பும் வகையில் பயங்கர சப்தத்துடன் ஒளி பந்தாக வெடித்துள்ளது. இதனை தொடர்ந்து சூடான காற்று தன் முகத்தில் பலமாக அடித்ததாக டரிகோஷி குறிப்பிட்டுள்ளார். எனவே கண்களை மூடி கொண்டு தரையில் மண்டியிட்டு உட்கார்ந்து விட்டதாகவும், தான் ஸ்டெடியாக இருக்க முயன்ற போது, மற்றொரு புறத்திலிருந்து வந்த பலமான காற்று தன்னை அடித்து தூக்கி வீசியதாகவும் பின்னர் தான் மயக்கமடைந்து விட்டதால் அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை என கூறி உள்ளார்.

எமிகோ ஒகடா (Emiko Okada):

ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட போது இவர் 8 வயது சிறுமி ஆவார். குண்டு வெடிப்பின் மையத்திலிருந்து 2.8 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த ஒகடா, அணு குண்டிலிருந்து வெளியேறிய கதிர்வீச்சின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டார். கதிர்வீச்சு தன்னை தாக்கியதால் அதிகமாக வாந்தி எடுக்க ஆரம்பித்ததாகவும், தலைமுடி உதிர்ந்து, ஈறுகளில் இருந்து ரத்தம் வந்து கொண்டே இருந்ததாகவும் கூறி உள்ளார். பள்ளிக்கு செல்ல முடியாத அளவிற்கு தன் உடல்நிலை மிகவும் மோசமடைந்து இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

hiroshima


யோகா சுவா(Ryoga Suwa):

2017- ல் தனது 84 வயதில் அவர் ஹிரோஷிமா குண்டுவெடிப்பு பற்றி சாட்சியமளித்தார். குண்டுவீச்சு நடந்த நாளில், சுவா அந்த பகுதியில் இல்லை, ஹிரோஷிமாவிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு நகரத்தில் இருந்துள்ளார். இருப்பினும் தன்னை அணுகுண்டு சம்பவம் அனாதையாக்கி விட்டதாக வருந்தினார். குண்டு வெடிப்பின் பெற்றோர் காணாமல் போய்விட்டதாகவும், சகோதரி இறந்து விட்டதாகவும் குறிப்பிட்டார். குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து சுமார் 1 மாதம் கழித்து ஹிரோஷிமா சென்று பார்த்த போது, நகரமே ஒரு ஒரு தட்டையான தரிசு நிலமாக காட்சியளித்ததாக குறிப்பிட்டார்.

ஜாங்கியூன் லீ (Jongkeun Lee):

சம்பவத்தன்று 13 வயதான தாம் வேலைக்கு செல்லும் வழியில் குண்டு வெடித்ததாக சாட்சியம் அளித்துள்ளார். இக்குண்டு வெடிப்பு காரணமாக தீக்காயங்களால் பாதிக்கப்பட்டு பலவீனமடைந்ததாக கூறியுள்ளார் . லீயின் பெற்றோர் அவரை மீண்டும் கண்டுபிடிக்க ஒரு வருடம் ஆனது. ஆனால் வேலைக்குச் சென்ற லீயின் சகோதரி கடைசி வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

Also Read:  அமைச்சருக்கான சலுகைகள் தருவதாக அறிவித்த கர்நாடக அரசு – மறுத்த எடியூரப்பா!

டேக்கோ டெரமே (Taeko Teramae):

குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த வருடம் டேகோ டெராமே, 16 வயதான இளம்பெண் மற்றும் ஒரு மாணவ தொழிலாளி (student labourer) மற்றும் மூன்றாம் ஆண்டு உயர்நிலைப் பள்ளி மாணவர் ஆவார். 1945 ஆகஸ்ட் 6 அன்று காலை நேரத்தில் பணியிடத்தின் ஹால்வேயில் காத்திருந்த போது ஜன்னலுக்கு வெளியே பார்த்தார்.

அப்போது தெளிவான நீல வானத்தில் ஒரு பளபளப்பான பொருள் விழுவதை கவனித்தார். அது என்னவென்று அருகே இருந்த நண்பனிடம் கேட்க திரும்பிய போது, பயங்கர சப்தத்துடன் சுற்றுப்புறம் முழுவதும் வெள்ளை நிற ஃப்ளாஷால் மூழ்கினோம் என்று குறிப்பிட்டுள்ளார். தனது முகத்தில் பலத்த தூசி படலம் வேகமாக அடித்ததாகவும், அந்த விஷப் புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கட்டுக்கடங்காமல் வாந்தி எடுத்ததாகவும் சாட்சியம் அளித்துள்ளார் டேக்கோ டெரமே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேற்கண்ட பதைபதைக்க வைக்கும் சாட்சியங்கள் ஹிரோஷிமாவில் ஏற்பட்ட அழிவை நமக்கு கண்முன்னே நிறுத்துகின்றன. ஆனால் இந்த பேரழிவு அமெரிக்காவிற்கு போதுமானதாக இல்லை என்ற நிலையில் அது மீண்டும் ஒரு அணுகுண்டை, மற்றொரு ஜப்பானிய நகரமான நாகசாகி மீது வீசியது. இந்த அணுகுண்டு வீசப்பட்டதன் காரணமாக சுமார் 40,000-த்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். என்ன நடக்கிறது என்று உணரும் முன்பே பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவங்கள் மீண்டும் ஒரு உலகப்போர் அல்லது அணுகுண்டு தாக்குதல் நடக்க வேண்டாம் என்பதையே உலக நாடுகளுக்கு உணர்துகின்றன.
Published by:Arun
First published: