ஹோம் /நியூஸ் /உலகம் /

தலை சிதைக்கப்பட்டு, மார்பகங்கள் அறுக்கப்பட்ட நிலையில் இந்து பெண் கொடூர கொலை : பாகிஸ்தானில் பயங்கரம்!

தலை சிதைக்கப்பட்டு, மார்பகங்கள் அறுக்கப்பட்ட நிலையில் இந்து பெண் கொடூர கொலை : பாகிஸ்தானில் பயங்கரம்!

பாகிஸ்தானில் இந்து பெண் கொடூர கொலை

பாகிஸ்தானில் இந்து பெண் கொடூர கொலை

உயிரிழந்த தயா பீல் குடும்பத்திற்கு அந்நாட்டின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செனெட்டர் கிருஷ்ண குமாரி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, IndiaIslamabadIslamabad

பாகிஸ்தான் நாட்டில் இந்து பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் வசிக்கும் இந்து சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள சிஞ்சோரா என்ற பகுதியைச் சேர்ந்த இந்து பெண் தயா பீல். 40 வயதான இவர் கணவரை இழந்த விதவை பெண். இவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், சம்பவ தினமான டிசம்பர் 27ஆம் தேதி அன்று தயா பீல் மாயமாகியுள்ளார். அவரது பிள்ளைகள் தேடிய போது தான் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள விளை நிலத்தில் தயா பீலின் உடல் மிக மோசமாக சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. தயா கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரின் மார்பகங்கள் அறுக்கப்பட்டும், தலை உள்ளிட்ட பகுதிகள் சிதைக்கப்பட்ட நிலையிலும் உடல் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்த தயா பீல் குடும்பத்திற்கு அந்நாட்டின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செனெட்டர் கிருஷ்ண குமாரி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.  இந்த சம்பவம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தாம் பக்சியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கூறுகையில், "சம்பவம் குறித்து செய்திகளில் பார்த்தோம். அதேவேளை அந்த சம்பவம் பற்றி எங்களிடம் விரிவான விவரங்கள் இல்லை.

இதையும் படிங்க: உலகளவில் 1 பில்லியன் டன் உணவு வீணடிக்கப்படுகிறது - ஐக்கிய நாடுகள் அறிவிப்பு!

பாகிஸ்தான் அரசு தனது சிறுபான்மையினரை நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும், அவர்களது நலன்கள், பாதுகாப்பில் தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்பதையே மீண்டும் வலியுறுத்துகிறது" என்றார். பாகிஸ்தானில் பெரிய சிறுபான்மை சமூகமாக இந்துக்கள் உள்ளனர். அங்கு சுமார் 75 லட்சம் இந்துக்கள் வாழ்வதாக புள்ளி விவரங்கள் தெரிக்கிறது.

First published:

Tags: Crime News, Gang rape, Hindu