Home /News /international /

டிரம்பின் ஆட்சி சட்டவிரோதமானது.. பரபரப்பை அதிகரித்துள்ள ஹிலாரி கிளிண்டனின் குற்றச்சாட்டு..

டிரம்பின் ஆட்சி சட்டவிரோதமானது.. பரபரப்பை அதிகரித்துள்ள ஹிலாரி கிளிண்டனின் குற்றச்சாட்டு..

ஹிலாரி கிளின்டன்

ஹிலாரி கிளின்டன்

அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆட்சி சட்டவிரோத ஆட்சி என கடந்த முறை டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன் குற்றம் சாட்டியுள்ளார்.

    2016-ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்பை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன் டிரம்பை விட அதிக வாக்குகளை பெற்றிருந்த போதிலும் எலக்டோரல் காலேஜ் (electoral college) எனப்படும் தேர்வுக்குழுவில் 77 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வி அடைந்தார். இதுகுறித்த நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்த ஹிலாரி, 2016 ஆம் ஆண்டின் தேர்தலில் தனக்கு எதிராக தவறான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.

    டிரம்ப் மற்றும் ரஷ்ய ஊடகங்கள் அந்த தேர்தல் முடிவை தன்னிடமிருந்து திருடி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தன்னைப்பற்றி ரஷ்ய ஊடகங்கள் தவறான பிரசாரம் மேற்கொண்டதால் டிரம்புக்கு வாக்களிக்காதவர்கள் வீட்டிலேயே இருக்கவோ அல்லது மூன்றாம் தரப்பு வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவோ தூண்டப்பட்டனர் என அவர் கூறியுள்ளார்.

    மேலும் படிக்க...டிரம்ப் என்ற நபருக்கு வாக்களித்தேன்.. அதிபர் தேர்தலில் ஓட்டு போட்ட பின் டொனால்ட் டிரம்ப்..



    பெருந்தொற்று காலத்தில் தன்னால் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியும் என்றும், தற்போதைய அதிபர் டிரம்பின் ஆட்சி சட்டவிரோத ஆட்சி என்றும் நான்கு ஆண்டுகள் கடந்து அவர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கின்றன.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: America election, Donald Trump, Hillary Clinton, US Election 2020

    அடுத்த செய்தி