ஹோம் /நியூஸ் /உலகம் /

காதலர் தின கட்டுப்பாடு: ஹிஜாப் மற்றும் தொப்பிகளை அணிய மாணவர்களுக்கு உத்தரவிட்ட பாக்., மருத்துவ கல்லூரி

காதலர் தின கட்டுப்பாடு: ஹிஜாப் மற்றும் தொப்பிகளை அணிய மாணவர்களுக்கு உத்தரவிட்ட பாக்., மருத்துவ கல்லூரி

காதலர் தின கட்டுப்பாடு

காதலர் தின கட்டுப்பாடு

Valentine's Day 2022 : இந்த வழிகாட்டுதல்களை மீறும் மாணவர்களை பிடிக்க கல்லூரி வளாகத்தில் ஊழியர்கள் ரவுண்ட்ஸ் செல்வார்கள் என்றும் அந்த சர்குலரில் மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் எச்சரித்து உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பிப்ரவரி 14-ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானின் தேசிய தலைநகரான இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி தனது மாணவர்களுக்கு காதலர் தினத்தன்று கல்லூரி வழக்கம் மற்றும் வகுப்பறைகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. குறிப்பிட்ட மருத்துவ பல்கலைக்கழகம் தனது மாணவர்களுக்கு காதலர் தினத்தன்று கடைப்பிடிக்கவேண்டிய வழிகாட்டுதல்கள் அடங்கிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில் மாணவிகள் ஹிஜாப் அணிய வேண்டும் என்றும், மாணவர்கள் வெள்ளை தொப்பியை அணிந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. தவிர எதிர் பாலினத்தவர்களிடமிருந்து எப்போதும் 2 மீட்டர் இடைவெளியை கட்டாயம் பேணுமாறும் ஒட்டு மொத்த மாணவர்களையும் கேட்டு கொண்டுள்ளதாக ஊடக அறிக்கை ஒன்றில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலர் தின கொண்டாட்டங்கள் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும். எனவே அது தொடர்பான செயல்களில் பங்கேற்பதை தடை செய்யும் வகையில் கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி வெள்ளிகிழமையன்று இஸ்லாமாபாத் சர்வதேச மருத்துவக் கல்லூரி (Islamabad International Medical College) மேற்கண்ட நிபந்தனைகள் அடங்கிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது என்று ஃப்ரைடே டைம்ஸ் (Friday Times newspaper) என்ற செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக ஆடை குறியீட்டின்படி அனைத்து பெண் மாணவர்களும் தலைகள், கழுத்துகள் மற்றும் மார்பு பகுதிகளை சரியாக மூடிய நிலையில் ஹிஜாப் அணிந்திருக்க வேண்டும். அதே போல அனைத்து ஆண் மாணவர்களும் வெள்ளை பிரார்த்தனை தொப்பி அணிய வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வழிகாட்டுதல்களை மீறும் மாணவர்களை பிடிக்க கல்லூரி வளாகத்தில் ஊழியர்கள் ரவுண்ட்ஸ் செல்வார்கள் என்றும் அந்த சர்குலரில் மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் எச்சரித்து உள்ளது. மேலும் இந்த விதிகளை மீறும் மாணவர்களுக்கு பாகிஸ்தானிய ரூபாய் 5000 (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.2,150 ரூபாய்) அபராதம் விதிக்கப்படும் என்று கல்லூரி சுற்றறிக்கையை மேற்கோள் காட்டி Friday Times செய்தி வெளியிட்டு இருக்கிறது.

கடந்த 1996-ல் இஸ்லாமாபாத் சர்வதேச மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டது மற்றும் ரிபா சர்வதேச பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவ கல்லூரி இதுவாகும். காதலர் தினத்தன்று கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்த இஸ்லாமாபாத் பல்கலைகழகத்தின் சுற்றறிக்கை சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

இந்த காதலர் தின வழிகாட்டுதல்கள் குறித்து ட்விட்டரில் ஒரு சிலர் கேள்வி எழுப்பினாலும், பெரும்பாலானோர் இஸ்லாமிய சர்வதேச மருத்துவக் கல்லூரியின் இந்த விதிக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர்.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: Lovers day, Valentine's day