ஹோம் /நியூஸ் /உலகம் /

ஜூம் மீட்டிங்கில் உடலுறவு கொண்ட பள்ளிஆசிரியர்.. ஷாக்கான ஊழியர்கள்

ஜூம் மீட்டிங்கில் உடலுறவு கொண்ட பள்ளிஆசிரியர்.. ஷாக்கான ஊழியர்கள்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

வீடியோ கான்ஃபிரஸ் போது ஆசிரியர் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஜமைக்காவில் வீடியோ கான்பிரன்ஸிங் போது ஆசிரியர் ஒருவர் தன் பார்ட்னருடன் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  கொரோனா காலத்தில் வொர்க் ஃப்ரம் ஹோம் சகஜமாகிவிட்டது. பள்ளி மாணவர்களுக்கே ஆன்லைனில் தான் பாடம் நடத்தப்படுகிறது. அலுவலகங்களில் நடக்கும் மீட்டிங்குகள் கூட தற்போது ஆன்லைனிலே நடக்கிறது. கூகுள், ஜூம் போன்ற தளங்கள் இதற்கு உதவியாக இருக்கின்றன. இதுபோன்ற மீட்டிங்குகளின் போது சில அசெளகரியமான சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. அலுவலக மீட்டிங் போது சிலர் தங்களது வீடியோவை ஆஃப் மோடில் வைத்துவிட்டு வேறு பணிகளை செய்துக்கொண்டு மீட்டிங்கில் கலந்துக்கொள்வார்கள். கேள்விகளுக்கும் மட்டும் பதில் கூறிவிட்டு ஆடியோவையும் ஆஃப் செய்துவிடுவார்கள்.

  ஜமைக்காவில் ஆசிரியர் கூட்டமைப்பின் மாநாடு வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் நடந்தது. அதில் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டு பேசினர். கொரோனா காலத்தில் ஆசிரியர்கள் பணி செய்வது மிகவும் கடினமாக இருக்கிறது என ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். வீடியோ கான்ஃபிரன்சிங்கில் கலந்துக்கொண்ட நபர்களின் கவனம் எல்லாம் வேறு ஒருவரின் ஸ்கீரீனுக்கு சென்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்ட ஆசிரியர் ஒருவர் தன் பார்ட்னருடன் உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.  இருவரும் நிர்வாணமாக  உடலுறவில் ஈடுபட்டிக்கொண்டிருந்ததை கண்டு கூட்டத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் என்ன நடக்கிறது என குழப்பத்தில் இருந்தனர்.

  இந்த குழப்பத்துக்கு மத்தியில் கூட்டமானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த சில நாள்களில் இந்த வீடியோ இணையத்தில் வெளியானது. ஆசிரியருக்கு கடும் கண்டனங்கள் குவிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக குறிப்பிட்ட ஆசிரியர் மன்னிப்பு கேட்டுக்கொண்டதாக அந்நாட்டு ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது. கேமரா ஆன் செய்ததை நான் கவனிக்கவில்லை. தவறுதலாக இவ்வாறு நடந்துவிட்டதாக கூறியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்து தெரியவில்லை

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Online class, School Teacher, Sex, Sex Positions, Video calls