• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • தனியார் பள்ளியின் கழிவறையில் மறைத்து பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராக்கள்.. பெண்களை வீடியோ எடுத்தது அம்பலம்..

தனியார் பள்ளியின் கழிவறையில் மறைத்து பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராக்கள்.. பெண்களை வீடியோ எடுத்தது அம்பலம்..

CCTC Camera

CCTC Camera

மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகளின் சுவற்றில், ஷீட்களுக்கு பின்னும், வாஷ்பேசின் அருகேயும் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது.

  • Share this:
கழிவறையில் ஏராளமான ரகசிய கேமராக்கள் பொருத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பள்ளியின் உரிமத்தை கல்வித்துறையினர் ரத்து செய்துள்ளனர்.

சிசிடிவி எனப்படும் கேமராக்கள் இன்று பொதுமக்களின் பாதுகாப்புக்கு மிகவும் அத்யாவசிய ஒன்றாகியுள்ளன. சாலைகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள் என பல இடங்களிலும் பாதுகாப்புக்காக ரசசிய கேமராக்கள் நிறுவப்படுகின்றன. இதன் மூலம் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் தடுக்கப்படுவதும், திருட்டு வழக்குகளில் திருடியவர்கள் யார் என கண்டறிவதும் எளிதாகியுள்ளன.

அதே நேரத்தில் இந்த ரகசிய கேமராக்கள் பல நேரங்களில் தவறான விஷயங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. ஓட்டல் அறைகள், உடை மாற்றும் அறைகள், கழிவறைகள் போன்ற இடங்களில் ரகசியமாக இவை நிறுவப்பட்டு பெண்களின் அந்தரங்கங்களை வீடியோவாக எடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் பாகிஸ்தானில் உள்ள பள்ளி ஒன்றின் கழிவறையில் ஏராளமான ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

Also read:  குழந்தைகள் பட்டாசு வெடித்ததால் ஆத்திரத்தில் ஆசிட் வீச்சில் ஈடுபட்ட நபர்.. இரு பெண்களுக்கு தீக்காயம்..

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சி நகரில் செயல்பட்டு வரும் தி ஹேரக்ஸ் என்ற தனியார் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் கடந்த நவம்பர் 3ம் தேதி சிந்து மாகாண கல்வித்துறையை அணுகி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரின்படி, அவர் பணியாற்றி வரும் தனியார் பள்ளியின் கழிவறையில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதை பார்த்ததாகவும் இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரினார்.

உடனடியாக அந்த பள்ளிக்கு சென்று சோதனையிட்ட கல்வித்துறை அதிகாரிகள், கழிவறையில் சோதனை செய்த போது அங்கு ஆண்கள் மற்றும் பெண் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகளின் சுவற்றில், ஷீட்களுக்கு பின்னும், வாஷ்பேசின் அருகேயும் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது தவிர ஆசிரியர்கள், பிற ஊழியர்கள் பயன்படுத்தும் கழிவறை ஒன்றிலும் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. மேலும் இதன் மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதையும் அவர்கள் உறுதி செய்தனர்.

Also read:  டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக ஜஸ்பிரித் பும்ரா படைத்த புதிய சாதனை..

இதன் காரணமாக பள்ளி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் ஒன்றை அளித்த கல்வித்துறை இது குறித்து நவம்பர் 4ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியது. இருப்பினும் அன்றைய தினம் பள்ளி நிர்வாகிகள் யாரும் நேரில் வராததையடுத்து, விசாரணை முடியும் வரையில் பள்ளியின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அதே நேரத்தில் வீடியோக்கள் ரகசியமாக எடுத்து வைத்திருப்பதாக யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த விவகாரம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: