ஹோம் /நியூஸ் /உலகம் /

ஜப்பான் முதல் ஸ்ரீலங்கா வரை… பெயர் மாற்றப்பட்ட சில நாடுகளின் லிஸ்ட்… சுவாரஸ்ய பின்னணி!

ஜப்பான் முதல் ஸ்ரீலங்கா வரை… பெயர் மாற்றப்பட்ட சில நாடுகளின் லிஸ்ட்… சுவாரஸ்ய பின்னணி!

பர்மீஸ் இனத்தவர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் பர்மா என அழைக்கப்பட்ட நாடு, 1989-ல் இராணுவ ஆட்சியால் மியான்மர் என மாற்றப்பட்டது.

பர்மீஸ் இனத்தவர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் பர்மா என அழைக்கப்பட்ட நாடு, 1989-ல் இராணுவ ஆட்சியால் மியான்மர் என மாற்றப்பட்டது.

பர்மீஸ் இனத்தவர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் பர்மா என அழைக்கப்பட்ட நாடு, 1989-ல் இராணுவ ஆட்சியால் மியான்மர் என மாற்றப்பட்டது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • international, IndiaJapanJapan

உலகத்தில் சில நாடுகளின் ஒரிஜினல் பெயர் என்ன தெரியுமா? ஏன் அந்த நாடுகளின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது? விரிவாக காணலாம்.

சிலோன் டூ ஸ்ரீலங்கா:

சிலோன் என்கிற பெயரில் இருந்து எப்படி ஸ்ரீலங்காவாக பெயர் மாறியது தெரியுமா? இந்த தீவுக்கு இலங்கை என்கிற பெயர் 1960களில் இருந்துதான் பயன்பாட்டில் உள்ளது. ஆனால், இதற்கு முதன்முதலில் வழங்கப்பட்ட பெயர், லங்கா ஆகும். இது வெறுமனே ‘தீவு’ என்கிற பொருள்படும். இராமாயணத்தில், அரசன் இராவணன் இளவரசி சீதையை கடத்திக் கொண்டுபோனதாக சொல்லப்படும் தீவின் பெயர்தான் லங்கா. கௌதம புத்தரின் காலத்தில் தீவு அறியப்பட்டதால், லங்கா என்ற பெயரிலிருந்து பல பெயர்கள் இந்த தீவுக்கு வைக்கப்பட்டன, அதில் ஒன்றுதான் லங்காதீபா. ‘சஹீலன்’ என்ற அரபு வார்த்தையில் இருந்து சிலோன் என்ற பல வேறுபாடுகள் வந்தன. போர்சுகீஸ் மொழியில் செலியாவ், ஸ்பானிஷ் மொழியில் செலான், பிரெஞ்சு மொழியில் செலோன் என அழைக்கப்படுகிறது. இந்த தீவு பிரிட்டிஷ் காலனியாக மாறியபோது சிலோன் என்று மாற்றப்பட்டது. சிலோன் என்பது புகழ்பெற்ற தேயிலை ஆகும். அந்த தீவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படக்கூடிய புகழ்பெற்ற தேயிலை என்று சொல்லப்படுகிறது. பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெற்றப்பின் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வரை சிலோன் என்கிற பெயர்தான் அதிகாரப்பூர்வ பெயராக இருந்தது. பிறகு, அந்த தீவு ஒரு முழுமையான குடியரசாக மாறியப்பின் 1972-ல் ஒரு வழியாக ஸ்ரீலங்கா என்று பெயர் மாற்றப்பட்டது. அதாவது, லங்கா தீவின் பழங்காலப் பெயரில் இருந்து எடுக்கப்பட்டு, அதில் ‘ஸ்ரீ’ என்கிற ஒரு மெச்சத்தக்க வார்த்தையை இணைத்து, இலங்கை என்றால் ஒரு அற்புதமான தீவு என சொல்லப்பட்டது. ஸ்ரீலங்கா (Sri Lanka) என்ற பெயர் சில நேரங்களில் ஸ்ரீலங்கா (Shri Lanka) என உச்சரிக்கப்படுகிறது. ஏனென்றால், இது முன்னாள் பிரதமர் ஒருவரின் விருப்பமாக இருந்துள்ளது. அவர் Shri-லங்கா என அந்த வழியில் தீவை அழைக்க விரும்பினாராம். அதனால், அப்படி உச்சரிக்கவும் ஊக்கப்படுத்தினார் என வரலாறு சொல்கிறது.

சியாம் டூ தாய்லாந்து:

தென்கிழக்கு ஆசியாவில் இருக்கும் நாடு தாய்லாந்து. தாய்லாந்து வரலாற்று ரீதியாக சியாம் என அழைக்கப்பட்டது. 1939ஆம் ஆண்டில் Field Marshal Phibun Songkram தலைமையிலான தாய்லாந்து இராணுவ அரசாங்கம் நாட்டின் பெயரை சியாம் என்ற பெயரில் இருந்து தாய்லாந்து என மாற்றியது. ‘தாய்’ மொழிக் குழுவில் இருக்கும் ஒரு மொழியை பேசும் மக்கள் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தாய்லாந்தில் குடியேறினார்கள். அதன் அடிப்படையில் நாட்டின் பெரும்பான்மையை பிரதிநிதித்துவப்படுத்தவும் மக்களிடையே பிரபலமான பெயரைக் கொண்டு நாட்டை அழைக்கவும் தாய்லாந்துதான் பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டது. மறுபுறம், சியாம் என்கிற பெயர் சயம் என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. ஏறக்குறைய 800 ஆண்டுகளாக சியாம் என்கிற பெயர்தான் அந்த பேரரசின் பெயராக இருந்ததாக கூறப்படுகிறது.

நிப்பான் டூ ஜப்பான்:

மலைகளுக்கும், சுஷி போன்ற உணவுகளுக்கும் பெயர் போன நாடு ஜப்பான். ஜப்பான் என்று அந்த நாடு அழைக்கப்படுவதற்கு காரணம், முதலில் தென் சீனாவில் ஜு-பாங் என அழைத்தார்கள். அதாவது சூரியன் உதிக்கும் இடம் என்பது அதன் பொருள். ஜப்பான் கிழக்கு திசையில் அமைந்திருப்பதால், அதாவது சூரியன் உதிக்கும் திசையில் இருப்பதால் முதலில் மக்கள் நிப்பான் என அழைத்தார்கள். நிப்பான் என்றால் ஜாப்பனீஸ் மொழியில் சூரியன் அல்லது பகல் என பொருள்படும். அதனால்தான் ஜப்பான் சில நேரங்களில் 'The country of the rising sun' என அழைக்கப்படுகிறது. சரி, இந்த நாட்டுக்கு ஜப்பான் என்று பெயர் வைத்தது யார் தெரியுமா? நம்மில் பலர் மேலோட்டமாக மார்கோ போலோ என கேள்விபட்டிருப்போம். இவர்தான் ஜப்பானின் பெயரை மேற்கத்திய உலகுக்கு கொண்டு வந்தார். ஆனால், உண்மையில் மார்கோ போலோ தான் ஜப்பானின் பெயர் மாற்றம் செய்தாரா என இன்னும் தெரியவில்லை. இருப்பினும், வெளி உலகுக்கு கொண்டு வந்தது இவர்தான். சரி, ஜப்பான் என்றால் என்ன? மேலே குறிப்பிடப்பட்டது போல் சூரியன் உதிக்கும் இடம் என்று பொருள். இது உண்மையிலேயே சீன மொழியில் இருந்து உருவானது என சொல்கிறார்கள். அதே ஜப்பான் என்ற வார்த்தையின் ஜாப்பனீஸ் பொருள் என்னவென்றால், நிப்பான் அல்லது நிஹான் என குறிப்பிடப்படுகிறது. அதைதான் நாம் ஆங்கிலத்தில் ‘ஜப்பான்’ என சொல்றோம். இதுவே பிரெஞ்சு மொழியில் ஜபோன் என சொல்கிறார்கள், இத்தாலியனில் ஜியாபோன் எனவும் சொல்கிறார்கள். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், மார்கோபோலோ நாட்கள் தொடங்கி இன்றும் கூட, சீனாவின் தெற்குப் பகுதியில், ஜப்பான் நாட்டை ஜி-பாங் அல்லது ஜு-பாங் என்றுதான் அழைக்கிறார்கள். மார்கோபோலோ ஜப்பானை ஜி-பாங் என அழைத்தாராம். ஏனென்றால், சீனாவில் தெற்குப் பகுதியில் இருந்த மக்கள் சூரியன் உதிக்கும் இந்த நாட்டை பற்றியும் அதை குறிக்கப் பயன்படுத்திய சொல்லைப் பற்றியும் அவரிடம் கூறியதால் மார்கோ போலோ மேற்கத்திய உலகிற்கு ‘ஜப்பான்’ என்ற பெயரை கொண்டு வந்தார் என சொல்லப்படுகிறது.

பர்மா டூ மியான்மர்:

மியான்மர் அதிகாரப்பூர்வமாக அந்த பெயரில்தான் அழைக்கப்படுகிறது. பர்மீஸ் இனத்தவர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் பர்மா என அழைக்கப்பட்ட நாடு, 1989-ல் இராணுவ ஆட்சியால் மியான்மர் என மாற்றப்பட்டது. மியான்மர் தற்போது பல ஆண்டுகாலமாக தன்னுடைய ஜனநாயகத்தை நிலைநாட்ட போராடி வருகிறது. அந்த போராட்டத்தின் முன்னணியில் பிரபல தலைவராக அறியப்படுகிற ஆன் சாங் சூகி, ஆட்சியை நிறுவவும், வாக்களிப்பை நடத்தவும் நிர்வகிக்கிறார், சர்வதேச அளவில் கூட ஏற்றுக்கொள்ளும் ஒரு தலைவராக சூகி பார்க்கப்படுகிறார். ஆனால், பிப்ரவரி 2021-ல் இராணுவ புரட்சியால் இது எல்லாம் வீழ்ந்தது. ஆட்சிக் கவிழ்ப்பு என்பது நாடு பெற்ற அனைத்து நல்ல விஷயங்களையும் இழக்கிறது என்பது அர்த்தம். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் கூட அது மியான்மர் அல்ல, பர்மா, இது இராணுவ ஆட்சியின் மீறல் என சுட்டிக்காட்டி இருந்தார். அதேபோல வாஷிங்டன்னில் உள்ள மக்களும், அந்த நாட்டை இன்னும் ‘பர்மா’ என்றுதான் வகைப்படுத்துகிறார்கள்.

First published:

Tags: Japan, Myanmar, Srilanka, Thailand