ஹோம் /நியூஸ் /உலகம் /

ட்விட்டரில் ப்ளு டிக் வேணுமா.. மாசம் ரூ.661 கட்டுங்க.. எலான் மஸ்க் அதிரடி!

ட்விட்டரில் ப்ளு டிக் வேணுமா.. மாசம் ரூ.661 கட்டுங்க.. எலான் மஸ்க் அதிரடி!

எலான் மஸ்க் ட்விட்டர்

எலான் மஸ்க் ட்விட்டர்

Twitter | ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க் தற்போது அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, Indiafrancisfrancisfrancisfrancis

    ட்விட்டரின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க், மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் ப்ளூ டிக்களைப் பெற மாதத்திற்கு $8 வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

    டிவிட்டரின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க், மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் ப்ளூ டிக்குகளைப் பெறுவதற்கு, மாதத்திற்கு 8 டாலர், (இந்திய மதிப்பு ரூ. 661) வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

    எதற்கு இந்த ப்ளு டிக்:

    டிவிட்டரில் கணக்கு சரிபார்க்கப்பட்டதை நீல நிற டிக் குறிக்கிறது.  இது குறித்து எலான் மஸ்க் பதிவு செய்த ட்வீட்டில், சம்பந்தப்பட்ட நாட்டின் வாங்கும் திறனுக்கு ஏற்ப ப்ளூ டிக் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அதன் பலன்கள் என்ன என்பதையும் கூறியுள்ளார்.

    மேலும், “டிவிட்டரில்,  ‘ஸ்பேம் மற்றும் ஸ்கேமை’ நீக்குவது மிகவும் முக்கியம். மேலும் பதில் அளிப்பதிலும், தேடலில் பயனர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். மேலும் இதில் பெரிய அளவிலான வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை பகிர முடியும். இது தவிர, விளம்பரங்களின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்த முடியும்” எனவும் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.

    ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க் தற்போது அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். ஆரம்பத்திலேயே தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல் ஆகியோரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார். தொடர்ந்து ட்விட்டரின் இயக்குனர்கள் குழுவையும் கலைத்திருந்தார்.

    தற்போது மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் ப்ளூ டிக்குகளைப் பெறுவதற்கு, மாதத்திற்கு 8 டாலர் வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

    Published by:Anupriyam K
    First published:

    Tags: Elon Musk, Twitter