மந்தை நோய் எதிர்ப்பு சக்தி என்பது சிக்கலானது: உலக சுகாதார நிறுவனம் விளக்கம்

மந்தை நோய் எதிர்ப்பு சக்தி என்பது அறிவியல் ரீதியாகவும், நெறிமுறைகளின்படியும் சிக்கலானது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதானோம் கூறியுள்ளார்.

மந்தை நோய் எதிர்ப்பு சக்தி என்பது சிக்கலானது: உலக சுகாதார நிறுவனம் விளக்கம்
டெட்ரோஸ்
  • Share this:
ஒரு குறிப்பிட்ட சதவீத மக்கள் நோயால் பாதிக்கப்படும்போது அங்கு மந்தை எதிர்ப்பு சக்தி உருவாகி மற்றவர்கள் நோயிலிருந்து காக்கப்படுவார்கள் என்ற கருத்து நிலவி வருகிறது. இதுகுறித்து விளக்கமளித்த உலக சுகாத நிறுவனத் தலைவர் டெட்ராஸ் அதானோம், மந்தை நோய் எதிர்ப்பு சக்தி என்னும் வார்த்தையே தடுப்பூசி தொடர்புடையது என்று தெரிவித்துள்ளார். அம்மை நோய்க்கு எதிரான மந்தை நோய் எதிர்ப்பு சக்தி பெற 95 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றும் இதனால் எஞ்சியுள்ள 5 சதவீதம் பேரால் மற்றவர்களை பாதிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க...இரு சிறுமிகளை 75 வயது முதியவர் உட்பட 15 பேர் 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதைஇது போல போதிய அளவு தடுப்பூசி செலுத்தப்படும்போது மட்டுமே மந்தை நோய் எதிர்ப்பு சக்தி பெற முடியும் என்று விளக்கியுள்ள அதானோம், கொரோனாவுக்கு எதிரான போரில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி மக்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு உலக நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
First published: October 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading