Home /News /international /

70 ஆண்டுகளுக்கு முன் இறந்த பெண், லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி வருகிறார்!

70 ஆண்டுகளுக்கு முன் இறந்த பெண், லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி வருகிறார்!

Henrietta lacks

Henrietta lacks

ஹென்ரீட்டா லாக்ஸ், பால்டிமோரில் உள்ள ஜான் ஜாப்கின்ஸ் என்ற மருத்துவமனையில் இறந்தார். இவருடைய அனுமதியின்றி, இவரின் திசுக்களை மருத்துவமனை பயன்படுத்தத் தொடங்கியது.

மிக மிகக் கொடுமையான நோய்களில் ஒன்று புற்றுநோயாகும். எப்படி எதனால் பாதிக்கப்படுகிறோம் என்பது கண்டறிவதற்கு முன்பே, முற்றிய நிலையை அடைந்து விடுகின்றனர். உலகம் முழுவதும் புற்றுநோயால் மரணம் அடைந்தவர்கள் பலர் உள்ளனர். 70 ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோயால் இறந்த ஒரு ஆப்பிரிக்கப் பெண், இன்று லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி இருக்கிறார், காப்பாற்றி வருகிறார். அதற்குக் காரணம் அவரின் HeLa செல்கள்.

ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்தவர், ஹென்ரீட்டா லாக்ஸ். இவர் 1951ம் ஆண்டு அக்டோபர் மாதம், செர்விக்கல் கேன்சரால் இறந்தார். இவர் இறந்த போது, இவரின் வயது 21 தான். இவர் இறந்து 70 ஆண்டுகள் ஆனாலும், இவருடைய உடலில் உள்ள செல்கள் இன்று வரை பல்வேறு மருத்துவ கண்டிபிடிப்புகளுக்கு காரணமாக, ஆதரவாக இருந்து வருகிறது. போலியோ தடுப்பூசி, HPV தடுப்பூசி, ஜெனெடிக் மேப்பிங் மற்றும் கோவிட் தடுப்பூசி உட்பட பல்வேறு உயிர் காப்பாற்றும் மருந்துகளுக்கு இவர் காரணமாக இருக்கிறார்.

மருத்துவ உலகில் இவரின் செல்களுக்கு HeLa செல்கள் என்று பெயரிட்டுள்ளனர். HeLa என்பது இவருடைய பெயரின் ஆங்கில முதலெழுத்துகளைக் குறிக்கின்றன (Henrietta Lacks). HeLa செல்களில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது, எப்படி உயிர்களைக் காப்பாற்ற உதவியாக இருக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.

Also read: பேஸ்புக் பெயரை மாற்ற மார்க் ஸக்கர்பர்க் திட்டம்? – அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகிறது..

ஹென்ரீட்டா லாக்ஸ், பால்டிமோரில் உள்ள ஜான் ஜாப்கின்ஸ் என்ற மருத்துவமனையில் இறந்தார். இவருடைய அனுமதியின்றி, இவரின் திசுக்களை மருத்துவமனை பயன்படுத்தத் தொடங்கியது. இந்த முயற்சி, ஆய்வுக்கூடத்தில் அழிவில்லாத மனித செல்கள் 'இம்மார்டல் லைன்' என்பதின் வளர்ச்சிக்கு வித்திட்டன. இந்த செல்கள் எண்ணிக்கையின்றி வளரும் தன்மைக் கொண்டது.

மரணம் ஏற்படுத்தக்கூடிய பல்வேறு நோய்களான எய்ட்ஸ், லுக்கேமியா, பார்க்கின்சன்ஸ் நோய், மற்றும் வாழ்க்கை முழுவதும் பாதிப்பை ஏற்படும் போலியோ தாக்குதல், உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்க HeLa செல்கள் மிகப்பெரிய பங்கை வகித்துள்ளன.

Also read:  ஐஆர்சிடிசி நிறுவனம் சந்தை மதிப்பில் ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டி சாதனை!

சமீபத்தில், ஹென்ரீட்டாவின் 70 வது ஆண்டு நினைவு நாளையொட்டி, உலக சுகாதார மையம், இவருடைய பங்களிப்பை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், இவரிடம் அனுமதி வாங்காமலேயே செல்களை எடுத்து ஆய்வு செய்ய உட்பட்டது தவறான செயல் என்பதையும் 'வரலாற்றுப் பிழை' என்று பதிவு செய்தது. மேலும், இவருடைய அடையாளத்தையும் மறைத்தது தவறு என்றும் கூறியது.

இறந்தும், மருத்துவ உலகின் முன்னேற்றங்களில் ஒரு மைல்கல்லாக செயல்பட்டு வரும் ஹென்ரீட்டாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவருக்காக, 'Henrietta Lacks Legacy' என்ற பெயரில் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு ஆப்பிரிக்க வம்சாவளி பெண்ணின் செல்களை முறையான அனுமதியின்றி பயன்படுத்தி வந்தது குற்றம் என்று கூறப்பட்டு வருகின்றது. கறுப்பினப் பெண்ணாக இருப்பதால் அவரின் உடல் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர் ஒரு மருத்துவ முறையின் மீது நம்பிக்கை வைத்து சிகிச்சை பெற்றார். ஆனால், அவருக்கு தெரியாமலேயே இந்த முறையற்ற செயல் நடந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று பலரும் கருத்துக்கள் கூறி வருகின்றனர்.

Also read:  மகாராஷ்டிரா காங்கிரஸில் டென்ஷன்.. உட்கட்சி பூசலால் மூத்த தலைவர் ராஜினாமா..

உலக சுகாதார மையத்தின் அறிக்கைகள், 75,000க்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வுகளில் HeLa செல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன மற்றும் 50 மில்லியன் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான HeLa செல்கள் உலகம் முழுவதிலும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கின்றன.
Published by:Arun
First published:

Tags: Indian medical association, Medicine

அடுத்த செய்தி